சஹரானுடன் நெருங்கிய உறவை பேணி வந்த சந்தேகத்தில் இருவர் கண்டியில் கைது !!

உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌவ்ஹீத் ஜமாத்தின் தலைவருமான பயங்கரவாதி சர்ஹானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினரும்,பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கண்டியிலுள்ள ஹின்குள்ள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சஹரானுடன் நெருங்கிய உறவை பேணி வந்த சந்தேகத்தில் இருவர் கண்டியில் கைது !! சஹரானுடன் நெருங்கிய உறவை பேணி வந்த சந்தேகத்தில் இருவர் கண்டியில் கைது !! Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5