மஹிந்த கொண்டுசென்ற அதே இடத்திற்கு நாட்டை மைத்திரியும் கொண்டு சென்றுள்ளார்..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டைக் கொண்டு வந்த நிலைமைக்கே தற்போதை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும் நாட்டைக் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் எமது நாடு மீளெழுந்த போது முழு உலகும் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தது. முழு உலகமும் எமது நாட்டுக்கு மரியாதை செய்தது. அந்த மரியாதை எமது ஜனாதிபதிக்கே கிடைத்தது.

ஜி.7 மாநாட்டுக்கு எம்மைப் போன்ற சிறிய நாடுகளை அழைப்பதில்லை. இருந்தும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பியதனால், எமது நாட்டுத் தலைவருக்கு விசேட அதிதியாக கலந்துகொள்ள அழைப்பு வந்தது.

அந்த மாநாட்டில் ஏழு நாடுகளின் தலைவர்களும் ஜனாதிபதியின் கதிரைக்கு அருகில் வந்து கதைத்துச் சென்றனர். இருப்பினும், இந்த தலைவருக்கு அந்த சிறப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தெரியவில்லை.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒரு இரவில் உலக நாடுகள் வைத்திருந்த கௌரவத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இன்று இந்த தலைவருக்கு கிர்கிஸ்தான், பல்கிஸ்தான், கசகிஸ்தான் போன்ற நாடுகளே அழைப்பு விடுக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ கொண்டுவந்த அதே நிலைக்கு எமது நாட்டை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியும் கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.  
மஹிந்த கொண்டுசென்ற அதே இடத்திற்கு நாட்டை மைத்திரியும் கொண்டு சென்றுள்ளார்.. மஹிந்த கொண்டுசென்ற அதே இடத்திற்கு நாட்டை மைத்திரியும் கொண்டு சென்றுள்ளார்.. Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.