ரணில் ஓகே என்றால் களத்தில் குதிப்பேன்!
- சஜித் அதிரடி 
"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு
கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன்."

- இவ்வாறு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ. 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் போட்டியிடமாட்டார். இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் கட்டாயம் களமிறங்குவார். வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரே முதலிடத்தில் உள்ளது. 

அதேவேளை, கட்சியின் பிரதித் தலைவரான எனது பெயரும், சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன. 

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்ற விபரத்தை கட்சியின் உயர்பீடம் வெளியிடும். 

எனக்குப் பதவி ஆசை இல்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன். 

முன்னாள் ஜனாதிபதியான எனது தந்தை பிரேமதாஸ இந்த நாட்டுக்குச் செய்த சிறந்த சேவைகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதன் பிரகாரம் நானும் செயற்படுவேன்" - என்றார்.
ரணில் ஓகே என்றால் களத்தில் குதிப்பேன்! ரணில் ஓகே என்றால்  களத்தில் குதிப்பேன்! Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5