முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா ; ரனிலின் அரசியல் சாணக்கியம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் புகழாரம்...முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா விடயத்தில்  ரனில் விக்ரமசிங்கவின்  அரசியல்
சாணக்கியம் தொடர்பில் ஐக்கிய தேசிய  கட்சி முக்கிய உறுப்பினர்கள் சிலர் புகழாரம் சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி கிரிஸ்தவ MP க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் நிரோஷன் பெரேரா ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி கட்சி ஹெல உறுமய கூட கோரிக்கை விடுத்திருந்தன. 

அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வாக்களிப்பிற்கு வந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய கருத்து முரண் ஏற்படும் என்ற தெளிவான ஒரு களநிலவரம் காணப்பட்ட சந்தர்ப்பத்திலேயே ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது.

விபரீதம் அறிந்த முன்னாள் அமைச்சர் ஹரீஸ் அமைச்சர் ரிஷாத் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்கள் குறிப்பாக சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுள்ள கபீர் ஹலீம் போன்றவர்கள் பதவி விலகக் கூடாது என்ற யோசனையே பலரின் அபிப்பராயமாக இருந்துள்ள போதும் இல்லை அனைவரும் ராஜினாமா செய்து உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கும் அவருக்கு ஆதவளித்த அரசியல்வாதிகளுக்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே பிரதமர் தரப்பு அனைவரும் ராஜினாமா செய்யும்  தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே பிரதமர் எதிர்ப்பின்றி அனைவரும் ராஜினாமா செய்யும் யோசனைக்கு பச்சை கொடி காட்டியதாக கூறப்படுகிறது.

குறித்த தீர்மானத்தை அடுத்து முஸ்லிம்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை சூழ்ந்துகொண்டுள்ளதாக அக்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் பிரதமரின் அரசியல் சாணக்கியத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா ; ரனிலின் அரசியல் சாணக்கியம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் புகழாரம்... முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா ; ரனிலின் அரசியல் சாணக்கியம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் புகழாரம்... Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5