இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும்.


இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக
இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியொருவருக்கு நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான  தகுதி இருக்க வேண்டும் என்றும், அதற்காக சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டுக்கு தேவை நேர்மையாக பேசும், ஏதாவ​தொரு பிரச்சினையை மற்றையவர்கள் மீது சுமத்தாத ஒருவரே தேவை. அது மாத்திரமின்றி நாட்டு பிரச்சினை, உலகப் பிரச்சினைத் தொடர்பில் சிறந்த தெளிவுள்ள ஒருவரென்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். Reviewed by Madawala News on June 24, 2019 Rating: 5