எனது மாவட்ட மக்களுடன் கலந்தாலோசித்திருக்காலாம் ; ராஜினாமா தொடர்பில் கபீர் ஹஷீம் கருத்துதனது மாவட்ட மக்களுடன் கலந்தாலோசித்திதுத்து  ராஜினாமா தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடக்காமல் தொடர்பில் தான் வேதனை அடைவதாகவும் அமைச்சர்  கபீர் ஹஷீம் கருத்து வெளியிட்டார்.


நாடு திரும்பிய அவர் மஹநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


ஆம் எமது தரப்பில் தவறு நடந்திருக்காலாம் , சிறு குழு ஒன்று எமது மார்க்கத்தை எமது கலாசாரத்தை  திரிபுபடுத்தி வெளிநாட்டு கலாசாரங்களை கொள்கைகளை உட்புகுத்தி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக முஸ்லிம் சமூகத்தை   பாவித்துள்ளனர்.


நாம் அதனை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது அவற்றை நாம் திருத்திக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

எனது மாவட்ட மக்களுடன் கலந்தாலோசித்திருக்காலாம் ; ராஜினாமா தொடர்பில் கபீர் ஹஷீம் கருத்து எனது மாவட்ட மக்களுடன் கலந்தாலோசித்திருக்காலாம் ; ராஜினாமா தொடர்பில் கபீர் ஹஷீம் கருத்து Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5