அரச ஊழியர் ஆடை சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட மாட்டாது !! சிறு சிறு திருத்தங்கள் செய்யப்படும்..

அரச ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் துறைசார் அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் உயர்மட்டக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெளியிடப்பட்டிருந்தது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டிருந்த நிலையில் தான் இது தொடர்பில் அறிந்திருந்தாக விடயதான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.


மேலும் குறித்த சுற்றுநிருபம் 1989 ஆண்டு வெளியிடப்பட்ட  ஒன்று என கூறிய அவர் நாட்டில் சிங்கள பெண்களும் சாரி அணிவதாகவும், தமிழ்  பெண்களும் சாரி அணிவதாகவும் , முஸ்லிம் பெண்களும் சாரி அணிவதாகவும் குறிப்பிட்ட அவர் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தவே சாரி தொடர்பில் குறிப்பிட்டோம்.

குறித்த சுற்று நிருபம் ரத்து செய்யபடமாட்டாது என கூறிய அவர் அதில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அரச ஊழியர் ஆடை சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட மாட்டாது !! சிறு சிறு திருத்தங்கள் செய்யப்படும்.. அரச ஊழியர் ஆடை சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட மாட்டாது !! சிறு சிறு திருத்தங்கள் செய்யப்படும்.. Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5