கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் விபரம்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் விபரம்..


கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து
கொண்டது தொடர்பில் செய்தி வெளியிட்டு இறந்தோம்.
https://www.madawalaenews.com/2019/06/video_14.html

கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது சன்ஹில் ஹோட்டல் அருகில்  மூன்று பேரும் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

இளம் தாய் ஒருவரும் இரண்டு மகன்மாருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் நேற்றிரவு 6:20  மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஜெனட் தர்ஷனி ராமைய்யா என்ற 32 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அவரது 12 மற்றும் 8 வயதுடைய மகன்களுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் ஏழ்மை மற்றும் சுகயீனம் காரணமாக   இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரதும் உடல் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அவரது தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சற்று தூரத்தில் கிடந்த பையில் “எங்களுக்கு வாழ வழியில்லை” என எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் விபரம்.. கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் விபரம்.. Reviewed by Madawala News on June 15, 2019 Rating: 5