ஞானசார தேரரை விடுதலை செய்ய பரிந்து பேசிய முஸ்லிம் தரப்பினர்களை கடுமையாக விமர்சித்த முஸ்லிம் தலைவர் .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஞானசார தேரரை விடுதலை செய்ய பரிந்து பேசிய முஸ்லிம் தரப்பினர்களை கடுமையாக விமர்சித்த முஸ்லிம் தலைவர் ..கடந்த வாரம் ரத்தன தேரர் நடத்திய உண்ணாவிரத போரட்ட களத்திற்கு சென்ற ஞானசா
தேரர் 12 மணி வரை காலக்கெடு வழங்குவதாகவும் இல்லையேல் நாடு முழுவதும் திருவிழா நடக்கும் என கூறியமைதை தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் பதற்றம் தோன்றியிருந்தது.


திங்கள் 12 மணிவரை ஞானசார தேரர் காலக்கெடு வழங்கி இருந்த நிலையில் அத்தினம் முன்னாள் அமைச்சர் பௌசி வீட்டில் முஸ்லிம் தலைவர்கள் கலந்துரையாடலுக்காக ஒன்று கூடியிருந்தனர்.
அப்போது ஞானசார தேரரின் எச்சரிக்கை தொடர்பில் அங்கு பேசப்பட்டிருந்தது அதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள்  அமைச்சர் ஒருவர் 
சில பக்குமற்ற அரைவேக்காடுகளின் கதைகளை கேட்டு ஞானசார தேரரை விடுதலைசெய்ய  முஸ்லிம் அமைப்புகளும்  அங்கத்தவர்களும் பரிந்து பேசினீர்கள்.அவரை விடுதலை செய்ய பரிந்து பேசும் முன்னர் எம்மோடு எவராவது வந்து ஆலோசனை செய்தீர்களாஇப்போது வந்து குத்துகிறதே குடையுகிறதே என கூறுவது என்ன விதத்தில் நியாயம் என மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாக அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது ..
ஞானசார தேரரை விடுதலை செய்ய பரிந்து பேசிய முஸ்லிம் தரப்பினர்களை கடுமையாக விமர்சித்த முஸ்லிம் தலைவர் .. ஞானசார தேரரை விடுதலை செய்ய பரிந்து பேசிய முஸ்லிம் தரப்பினர்களை கடுமையாக விமர்சித்த முஸ்லிம்  தலைவர் .. Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5