இலங்கை மருத்துவசபையின் உறுப்பினரை கைது செய்வதற்கான பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது.


சைட்டம் நிறுவனத்தில் மருத்துவ பட்டத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த, மாணவர்களை இலங்கை
மருத்துவ சபையில் பதிவு செய்யுமாறு, உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாமை மூலம், இலங்கை மருத்துவ சபை நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் குற்றஞ்சுமத்தி, தாக்கல் செய்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை மருத்துவசபையின் உறுப்பினரான, என்.எஸ்.ஏ. சேனார்தன நீதிமன்றில் முன்னிலையாகாமையால் அவரை கைது செய்வதற்கான பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் மருத்துவ பட்டம் தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமைக் காரணமாக, பல ​அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்து, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கற்ற தில்மி சூரியஆராச்சி என்ற மாணவி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணைகள் ஜூலை மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று  உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, அசல வெங்கபுலி, ஆகியோரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் உறுப்பினரான, என்.எஸ்.ஏ. சேனார்தன நீதிமன்றில் முன்னிலையா​காமைத் தொடர்பில், சட்டத்தரணியொருவர் ஊடாக அறிவிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கில் ஆஜராகாத ஏனைய வைத்தியர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது. எனினும் குறித்த வைத்தியர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலையாமைக்கான காரணம் அவர்களது சட்டத்தரணிகளால் காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
இலங்கை மருத்துவசபையின் உறுப்பினரை கைது செய்வதற்கான பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது. இலங்கை மருத்துவசபையின் உறுப்பினரை  கைது செய்வதற்கான பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.