சஜித் பிரேமதாசாவினால் ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சஜித் பிரேமதாசாவினால் ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது.

(அஸ்ரப் ஏ சமத்)
ஏறாவுரில் மிச் நகரில் 25 வீடுகளை கொண்ட யு.எல். தாவுத் மாதிரிக் கிராமம்
 அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் திறந்து 2019.6. 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.  இவ் வீடமைப்புத்திட்டத்தில் 25 வீடுகளும் உள்ளக பாதைகள், குடிநீா், மிண்சார வசதிகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சமட்ட செவன வீடமைப்புக் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ்  202 வது மாதிரிக்கிராமமாக இக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 


 காலம் சென்ற ஜனாப் தாவுத் அவா்கள் ஏறாவுரின் முதலாவது பட்டதாரி ,இப் பிரதேசத்தின் கல்வி வளா்ச்சிக்காகவும் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமைக்காகவும் மிகப் பெரிய பங்காற்றிய இவா் ஏறாவுர் அலிகாா் மத்திய கல்லுாாியில் அதிபராகவும் கொத்தனி அதிபராகவும் கடமையாற்றியவா். 


விளையாட்டு. கவிதை பேச்சு, போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இவரது தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பு என்பன இன்றும் இப்பகுதி மக்களால் போற்றத்தக்கதாக விளங்குகின்றது. இவா் 1990 ல் விடுதலைப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாா். 


இதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. அறிவாற்றலும் ஆளுமையும் மிக்க இவரை நினைவு கூா்ந்து ஏறாவுரில் நிர்மாணிக்க்பட்ட இம் மாதிரிக் கிராமம் யு.எல் தாவுத் கிராமம் என பெயா் வைக்கப்பட்டு அமைச்சா் சஜித்பிரேமதாச , முன்னாள் இராஜாங்க அமைச்சா் அலி சாகிா் மொலானா, எஸ்.எஸ் அமீா் அலி ஆகியோரது பங்களிப்புடன் இக் கிராமம் 2019.6.13ம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.


சஜித் பிரேமதாசாவினால் ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது. சஜித் பிரேமதாசாவினால்  ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது. Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5