2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் உள்ளது..


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம்
திகதியே பூர்த்தியாகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

சபாநாயகரினால் ஜனாதிபதியின் பதவியை அங்கீகரித்த நாள் முதல் பதவிக்காலம் ஆரம்பாகின்றது. 19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலின் பின்னரே ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆரம்பாகின்றது.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பூர்த்தியாகின்றது. இந்த விடயம் தொடர்பில் எவருக்கேனும் சந்தேகங்கள் இருந்தால் 19ஆம் திருத்தச் சட்டத்தை வாசித்து பார்க்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரினால், ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்து சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக்கூடும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் உள்ளது..  2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் உள்ளது.. Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.