யாழில் வாள்வெட்டு தாக்குதல்.. நான்கு பேர் படுகாயம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

யாழில் வாள்வெட்டு தாக்குதல்.. நான்கு பேர் படுகாயம்
யாழ்ப்பாணம், கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்த
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பாலாவி தெற்கிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28) , தங்கராசா ரஜீவன் (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதேவேளை, அயலவரான அருணாச்சலம் பொன்னையா (வயது 62) என்பவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் முகமாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாராணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

–கேசரி–
யாழில் வாள்வெட்டு தாக்குதல்.. நான்கு பேர் படுகாயம்  யாழில் வாள்வெட்டு தாக்குதல்..  நான்கு பேர் படுகாயம் Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5