முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம்.


பொதுவிடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் பொதுமக்கள் செயற்படக் கூடாது
என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.


ஆணைக்குழுவின் தலைவர் என்.டி. உடகம விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்க்கா உள்ளிட்ட ஆடைகள் மற்றும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் பெண்களின் கலாசார உடையான ஹிஜாப்பிற்கு எந்த தடையும் இல்லை.
ஹிஜாப் அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்கள் பலர் பொது இடங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டு சிரமத்துக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


இவை மனித உரிமை மீறல்களாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம்.  முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம். Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.