முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மூலங்கள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு ஞானசார தேரர் விளக்கம்..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள
கைதியான கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு 762 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி நேற்று (18) வெலிக்கட சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். இதன்போதே தேரரைச் சந்தித்து பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேரருடன் 15 நிமிட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும், இதன்போது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மூலங்கள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தேரர் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிப்பதாக சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அங்குலான பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி நிவ்டன் ஆகியோருடனும் சுகதுக்கங்களை விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது
முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மூலங்கள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு ஞானசார தேரர் விளக்கம்.. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மூலங்கள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு ஞானசார தேரர் விளக்கம்.. Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.