கல்முனை மாலை ஏற்பட்ட அசாதாரண நிலை ;இராணுவம் பாதுகாப்பு கடமைகளில்


இன்று மாலை கல்முனையில் முஸ்லிம் ஒருவரை தமிழ் இளைஞர்கள் தாக்கியுள்ளார்கள்.
இதனால், கல்முனையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது சுமூகமான நிலை காணப்படுகின்றது.

இச்சம்பவம் பற்றி தொியவருவதாவது,

கல்முனையைச் சேர்ந்த எஸ்.எல்.அறுசுதீன் (வயது 56) என்பவர் கல்முனை பிள்ளையார் (ஆணைக்) கோயில் (ஆர்கேஎம் மகா வித்தியாலய அருகில்) வீதியால் சென்று கொண்டிருந்த போது அங்கு சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அந்த இளைஞர்கள் எஸ்.எல்.அறுசுதீன் என்பவரை தடுத்து நிறுத்தி, நீ எங்கேடா போகப் போகின்றாய். நீ என்னடா ஜிஹாத்தாடா? உன்னுடைய பைக்கில் குண்டு இருக்கின்றதா என்று மிரட்டிக் கேட்டுள்ளார்கள்.

 இதற்கு அவர் நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்போது இதனை அவதானித்தவராக எதிரே கல்முனையை சேர்ந்த இன்னுமொருவர் வந்துள்ளார். அவர் என்னவென்று கேட்டுள்ளார். நான் ஜிஹாத்தாம் என்று சொல்லுராங்கடா தம்பி என்று எஸ்.எல்.அறுசுதீன் தொிவித்து விட்டு சென்றுள்ளார்.

இதன் பின்னர் ஏற்கனவே தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து டேய்.. என்னடா என்று அதட்டிய போது ஒருவர்  எஸ்.எல்.அறுசுதீனின் தலையில் கையால் அடித்துள்ளார்.

தம்பி நான் நோன்பு எனக்கு ஏன் அடிக்கீங்க என்று சொல்லியுள்ளார். நீ நோன்பு என்பதால்தான் விடுகிறோம். இல்லாவிட்டால் நடக்கிறது வேற. வாங்கடா போவோம். அவர் நோன்பாம் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள்.  

இவர்களின் இந்த காடைத்தனத்தை அவதானித்துக் கொண்டிருந்த சில தமிழ் சகோதரர்கள் நீங்க போங்க என்று சமாதானமாக்கி எஸ்.எல்.அறுசுதீனை அங்கிருந்து அனுப்பியுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கல்முனையில் பெருமளவில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



கல்முனை மாலை ஏற்பட்ட அசாதாரண நிலை ;இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் கல்முனை மாலை ஏற்பட்ட அசாதாரண  நிலை ;இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.