நாராஹேன்பிடிய தாபரே மாவத்தை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலுக்கு சீல் வைப்பு !



நாராஹேன்பிடிய தாபரே மாவத்தை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக
அப்பள்ளிவாயல் தலைவர் நிஸாம் ஹாஜி குறிப்பிட்டார்.

கடந்த 19 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட குறித்த பள்ளிவாயல் 1940 ஆண்டு முதல் ரயில்வேயினால் குத்தகைக்கு வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டதாகவும் அதற்கான குத்தகை பணம் ரயில்வே திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும்ம் குறிப்பிட்டார்.

வழமையாக 5 வருடங்களுக்கு ஒருமுறை குத்தகை பணம் கட்டும் அறிவுறுத்தல் கடிதம் தமக்கு  அனுப்பப்படுவதாக கூறிய அவர் இம்முறை அவருக்கு கடிதம் கிடைக்காததால் அதனை கட்ட தவறியதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த கடிதத்தை குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மறைத்துவிட்டதாக தான் சந்தேகிப்பதாக மேலும் சுட்டிக்காட்டிய அவர், 

தாங்கள் குத்தகை பணத்தை கட்டிவிட தயாராக உள்ளதாக கூறிய நிலையில்  ரயில்வே திணைக்களம் பள்ளிவாயலுக்கு சீல் வைத்து சென்றுள்ளதாகவும் தொடர்ந்து பள்ளிவாயலை நடத்த அனுமதி மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ஹலீம் அவர்களின் பிரத்தியேக  செயலாளர் பாஹிம் ஹாஷிம் அவர்களுடன் அவர் கதைத்து ஆலோசனை பெற்றுள்ள அதேவேளை ஐக்கிய சமாதான முன்னனி தலைவர் மிப்லாள் மௌலவியுடன் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாராஹேன்பிடிய தாபரே மாவத்தை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலுக்கு சீல் வைப்பு ! நாராஹேன்பிடிய தாபரே மாவத்தை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலுக்கு சீல் வைப்பு ! Reviewed by Madawala News on May 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.