இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனினும்
அந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

நாடளாவிய  ரீதியில் 241 அரநெறி பாடசாலைகள் அமைக்கும் திட்டத்திற்கு அமைய விகாரை ஒன்றில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனினும் அந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை நாம் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துவது எமது பொறுப்பாகும்.

இனங்களுக்கு இடையே பகைமை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் . ஏதாவது ஒரு சம்பவம் நேர்ந்தவுடன் தேவாளயங்கள் ,பள்ளிவாயல்கள் , கோவில்கள் தீயிட்டு கொழுத்தப்படுவதை சமூகம் ஒன்று என்ற வகையில் நாம் நிராகரிக்க வேண்டும்.அவற்றை தடுக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என  குறிப்பிட்டார்.


இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.