இது சிங்கள பௌத்த நாடு , சகல சமயங்களுக்கும் சமமான உரிமை உள்ளது ..



இது சிங்கள பௌத்த நாடு எனவும், அதேவேளை இங்குள்ள சகல சமயங்களுக்கும் சமமான
உரிமைகள் உள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸை தர்மபாலாராம விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பௌத்த மதத்தின் அடிப்படைகளையும், கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொண்டு, பிற மதத்தவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்க இடமளிக்காது, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கூறியுள்ளார்.

பாடசாலையின் இரண்டாம் தவணைப் பரீட்சை எந்தவித தடையும் இன்றி நடைபெறும் எனவும், எந்தவொரு குழுவினதும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.   
இது சிங்கள பௌத்த நாடு , சகல சமயங்களுக்கும் சமமான உரிமை உள்ளது .. இது சிங்கள பௌத்த நாடு , சகல சமயங்களுக்கும் சமமான உரிமை உள்ளது .. Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.