அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் ; மினுவங்கொட மஸ்ஜிதுக்கு விஜயம் செய்த எஸ் எம் மரிக்கார். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் ; மினுவங்கொட மஸ்ஜிதுக்கு விஜயம் செய்த எஸ் எம் மரிக்கார்.குருநாகல் , கம்பஹா  மாவட்டங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கு அரசாங்கம்
பொறுப்புக்கூறவேண்டும் என எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.

மினுவங்கொட மஸ்ஜிதுக்கு விஜயம் செய்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாத பாதுகாப்பு தரப்பு மீது ஒன்று பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த காலங்களைப் போன்றல்லாது பாதுகாப்பு துறையினர் தொடர்பில் விஷேட விசாரணைகள முன்னெடுக்க வேண்டும்.

இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க தாங்கள் அரசை வயிதுறுத்துவோம் என குறிப்பிட்டார்.
அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் ; மினுவங்கொட மஸ்ஜிதுக்கு விஜயம் செய்த எஸ் எம் மரிக்கார். அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் ; மினுவங்கொட மஸ்ஜிதுக்கு விஜயம் செய்த எஸ் எம் மரிக்கார். Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5