கொட்டம்பிட்டியவை தொடர்ந்து பண்டார கொஸ்வத்தையிலும் வன்முறை !!இன்று மாலை குருநாகல் ஹெட்டிபொல நகரில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கு பல
பள்ளிவாயல்கள் தக்கியாக்கள் தாக்கப்பட்டதாக ஊர்ஜிதமான தகவல் கிடைத்துள்ள நிலையில் ,

கொட்டாம் பிட்டி மற்றும் பண்டார கொஸ்வத்த ஆகிய இடங்களிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சகோதரர்கள் உறுதிப்படுத்தினர்.

பண்டாரகொஸ்வத்த பிரதேசத்தில் நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் சகோதரர் ஸபீர் மடவளை நியுஸுக்கு உறுதிப்படுத்தினார்.
கொட்டம்பிட்டியவை தொடர்ந்து பண்டார கொஸ்வத்தையிலும் வன்முறை !! கொட்டம்பிட்டியவை தொடர்ந்து பண்டார கொஸ்வத்தையிலும் வன்முறை !! Reviewed by Madawala News on May 13, 2019 Rating: 5