நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட குழு­வி­னர இந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர். பொலி­சாரும் அவர்­களை தாக்­க­விட்டு வேடிக்கை பார்த்­துள்­ளனர்நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட குழு­வி­னரே பெரு­மெ­டுப்பில் வந்து திடீ­ரென இந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.
பொலி­சாரும் அவர்­களை தாக்­க­விட்டு வேடிக்கை பார்த்­துள்­ள­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட மக்கள் என்­னிடம் தெரி­வித்­தனர். பாது­காப்புப் படை­யினர் கூட தாக்­குதல் சம்­ப­வங்கள் முடிந்த பிற­குதான் அப் பகு­தி­க­ளுக்கு வருகை தந்­துள்­ளனர். அத்­துடன் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை­யி­லேயே இந்த சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன என்­பதும் இங்கு கவ­னிக்க வேண்­டிய விட­ய­மாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கு­த­லுக்கு இலக்­கான கிரா­மங்­களை பார்­வை­யிட்ட பின்னர் ‘விடி­வெள்ளி’க்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

குரு­நாகல் மாவட்­டத்தில் இன­வாத சக்­தி­களின் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­களை நான் நேரில் சென்று பார்­வை­யிட்டு வரு­கிறேன். இம்­மா­வட்­டத்தின் நான்கு தேர்தல் தொகு­தி­க­ளுக்­குட்­பட்ட சுமார் 10 முஸ்லிம் கிரா­மங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. எல்லா பிர­தே­சங்­க­ளிலும் ஒரே வித­மான தாக்­கு­தல்­களே இடம்­பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்த தாக்­கு­தல்­க­ளின்­போது முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வியா­பார நிலை­யங்­களே அதிகம் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் செல்­வந்­தர்­க­ளது வீடு­களே பெரும்­பாலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. இதில் அப்­பாவி மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பள்­ளி­வா­சல்கள் மீது மூர்க்­கத்­த­ன­மாக தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­துடன் அங்கு சிறுநீர் கழித்தும் அசுத்­தப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்ந்தும் நடக்­கா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் குளி­யா­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் பிர­தமர் மற்றும் பிர­தே­சத்­திற்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் பங்­கேற்ற உயர்­மட்ட பாது­காப்பு கூட்டம் ஒன்றை நடாத்­தினோம். இதன்­போது குற்­ற­வா­ளி­களை கண்­ட­றிந்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு வலி­யு­றுத்­தினோம்.

குறிப்­பாக இந்த தாக்­கு­தல்­களை வெளி­யி­லி­ருந்து வந்த ஒரு குழு­வினர் செய்­த­தாக கூறி­னாலும் அதே பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­களும் இவற்­றுடன் தொடர்­பு­பட்­டுள்­ளனர். அவர்­களை மக்கள் நன்கு இனங்­கண்­டுள்­ளனர். அத்­துடன் அப் பகு­தியில் வழக்­க­மான குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோரும் இந்த தாக்­கு­தல்­களில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர். கிடைக்கப் பெற்­றுள்ள சிசி­ரிவி பதி­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டும் வாகன இலக்­கத்­த­க­டு­களை அடிப்­ப­டை­யாக கொண்டும் குற்­ற­வா­ளி­களை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்­மிடம் உறு­தி­ய­ளித்தார். நேற்­றைய தினம் கைது செய்­யப்­பட்ட சிலரை விடு­வித்­தமை தொடர்­பான விடயம் குறித்தும் நாம் பொலி­சா­ரிடம் வின­வினோம். அவர்­களை விடு­விக்­கு­மாறு கோரி ஹெட்­டி­பொலி பொலிஸ் நிலை­யத்தை சுற்றி வளைத்து கூமார் 2000 இற்கும் அதி­க­மானோர் ஆர்ப்­பாட்டம் செய்­ததால் பொலிஸ் நிலை­யத்தின் பாது­காப்பு கரு­தியும் நிலை­மையை கட்­டுப்­பாட்­டிற்கு கொண்டு வரும் நோக்­கி­லுமே அவர்­களை விடு­வித்­த­தாக எமக்கு கூறப்­பட்­டது. இவ்­வா­றான சம்­ப­வங்­களை தவிர்க்கும் வகையில், கைது செய்­யப்­படும் நபர்­களை அந்­தந்த பொலிஸ் நிலை­யங்­களில் தடுத்து வைக்­காது தூரப் பிர­தேச பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு கொண்டு செல்­லு­மாறு பிர­தமர் பொலி­சா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இந்தத் தாக்­கு­தல்­க­ளா­னது குரு­நாகல் மாவட்­டத்தின் வட­மேற்குப் பகு­தியில் உள்ள நான்கு தேர்தல் தொகு­தி­க­ளி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. எனினும் ஏனைய பகு­தி­க­ளுக்கு இவை பர­வா­த­வாறு நாம் களத்தில் நின்று ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளோம். இதன் பின்­ன­ணியில் அர­சியல் உள்­நோக்­கங்­களும் பழி­வாங்கும் மனப்­பாங்கும் இருக்­கலாம் என சந்­தே­கிக்­கிறோம்.

குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­களைத் தொடர்ந்து மக்கள் மத்­தியில் ஏற்­பட்ட அவ­நம்­பிக்­கைகள் மற்றும் தேடுதல் நட­வ­டிக்­கை­களின் போது கண்­டெ­டுக்­கப்­பட்ட பொருட்­களை ஊட­கங்கள் ஊதிப் பெருப்­பித்­தமை, அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வந்த வெறுப்­பூட்டும் கருத்­துக்கள் என்­பன சிங்­கள மக்கள் மத்­தியில் ஒரு­வித பதற்­றத்­தையும் அச்­சத்­தையும் தோற்­று­வித்­தி­ருந்த நிலையில், அதனைப் பயன்­ப­டுத்திக் கொண்ட ஒரு குழு­வி­னரே இந்தத் தாக்­கு­தல்­களை நடத்தி முடித்­தி­ருக்­கி­றார்கள். ஏப்ரல் 21 இல் இடம்­பெற்ற மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை கார­ண­மாக கொண்டு தமது ஆத்­தி­ரத்தை தீர்க்க சுய­லா­பங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒரு கும்பல் முயற்­சித்து வரு­கி­றது. அதன் விளைவே இந்தத் தாக்­கு­தல்­க­ளாகும்.

இந்த இடத்தில் முஸ்­லிம்கள் ஆத்­தி­ர­ம­டை­யாமல் உச்­சக்­கட்ட சகிப்­புத்­தன்­மையைக் கடைப்­பி­டிக்க வேண்டும். இந்த தருணத்தில் தம்மைச் சூழவுள்ள பௌத்த மதகுருக்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள தலைவர்களுடன் இணைந்து தமது கிராமங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். எம்மைச் சந்தித்த பல பௌத்த பிக்குமார் இச் சம்பங்களுக்காக கவலை வெளியிட்டனர். தமது எதிர்ப்பையும் மீறி இவ்வாறான சம்பவங்கள் நடந்துவிட்டதாக கூறினர்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தணிக்கவும் மீண்டும் சுமுக நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றார்.
நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட குழு­வி­னர இந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர். பொலி­சாரும் அவர்­களை தாக்­க­விட்டு வேடிக்கை பார்த்­துள்­ளனர் நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட குழு­வி­னர இந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர். பொலி­சாரும் அவர்­களை தாக்­க­விட்டு வேடிக்கை பார்த்­துள்­ளனர் Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5