உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்கள் அறிவிக்கப் பட்டது.


கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்
என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை. இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. என்றாலும், மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.


பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர் தமது பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.


கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும்.
உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்கள் அறிவிக்கப் பட்டது.  உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்கள் அறிவிக்கப் பட்டது.  Reviewed by Madawala News on May 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.