கோர விபத்து , மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கோர விபத்து , மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.

கெக்கிராவ, மடாடிகம கமபிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.


லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.


வேனில் பயணித்த மூன்று பேரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாத்தளை , கவட்ட யாமுன   பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் இன்று காலை அனுராதபுர ஸ்ரீ மகா போதி யை தரிசிக்க சென்ற வேளை யே  இந்த அனர்த்தம் நிகழ்ந்து உள்ளது.


விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கோர விபத்து , மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. கோர விபத்து , மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5