மர்ஹூம் இஸ்மாஈல் ஹzஸரத் தொடர்பான ஒரு சிறப்புப் பார்வை



மர்ஹூம் இஸ்மாஈல் ஹzஸரத் அவர்களிடம் அறிவைகற்று பயனடைந்த பல்லாயிரக்கணக்கானமாணவர்களில்
நானும் ஒருவன். 1990 களில் நாவலப்பிட்டி தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யஹ் அரபுக்கலாசாலையில் கற்றுக் கொண்டிருந்த போது அவர்களின் மாணவனாக அவர்களிடம் கல்வியைகற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது. அத்துடன் அக்கால கட்டங்களில் எழுத்துத் துறையில் அவர்களுக்கு ஊழியனாக கடமையாற்றும் சந்தர்ப்பமும் கிடைத்திருந்தது. 

மிகவும் பேணுதல் மிக்கவர்கள். ரஸூலுள்ளாஹிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மானசீகமான அன்பு வைத்திருந்தார்கள் என்பதை   அவர்களது பேச்சுக்களும், நடத்தையும், செயலும் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.  நபியவர்களது  ஸுன்னாக்கள் மீதும் அவற்றை பின்பற்றுவதிலும் மிக அதிக கவனமும், அலாதியானபிறியமும் கொண்டிருந்தார்கள்.

அடக்கமானவர்கள். எளிமையும் பணிவும் அவரகளிடம் காணப்படும் விசேட பண்புகளாகும். ஒருபோதும் அவர்கள் பணத்திற்கும் பணக்காரர்களுக்கும் பின்னால் சென்றதில்லை. பழகுவதற்கு மிகவும் மிருதுவானவர்கள். அன்பாக கதைப்பார்கள். மிகவும் மிருதுவான சுபாவம்கொண்ட ஹzஸரத் அவர்கள் நாமறிந்த வரையாருடைய உள்ளத்தையும் புண்படுத்துயது கிடையாது. சொற்பமாகவே கதைப்பார்கள்.  இலங்கையின் அக்குறணை நகரை பிறப்பிடமாக கொண்டவர்கள். அவர்கள் ஒரு துடிப்பான தாஈ.  இலங்கையின் முன்னோடி உலமாக்களில் மிகவும் முக்கியமானவர்கள். நான்கு திருமணங்களை செய்திருந்த ஹzஸரத் அவர்கள் தனது நேரத்தை தனது குடும்பங்களுக்கு, சமூகத்திற்கு, தஃவாவிற்கு ,இல்மிற்கு, அமலுக்கு என அழகாக பிரித்துவைத்திருந்தார்கள். 

இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல நாடுகளுக்கும்தப்லீக் ஜமாஅத்தில் சென்று  பாரிய அளவில் தஃவா பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள். தப்லீக் அமைப்பின் தாயக மர்கஸ் (டில்லி மர்கஸ்) இல் மர்ஹூம் இஸ்மாஈல் ஹஸ்ரத் அவர்களுக்கென தனியான இடமுண்டு. தப்லீக் ஜமாஅதின் உலக அளவிலான அமீர்களாக டில்லி மர்கஸில் செயற்பட்டு வரும்  மூத்த உலமாக்கள் கூட  இஸ்மாஈல் ஹஸ்ரத் அவர்களை மிகவும் மரியாதையாகவே நடாத்துவார்கள். 

ஹஸரத் அவர்கள் ஒரு வியாபாரியாகவும் செயற்பட்டுள்ளார்கள். தப்லீக் உழைப்பில்ஈடுபடுபவர்களுக்கு வெளியே ஏனைய தஃவாஅமைப்புக்களுடன் தொடர்பு பட்டவர்கள், பொதுமக்கள் என அதிகமான மக்களுடன் தொடர்பை பேணிவந்துள்ள ஹஸ்ரத் அவர்களை அறிந்து வைத்துள்ளஅனைவரும் அன்னாரை நேசித்து, அன்னாருக்குமரியாதை செய்து வருவதை வழக்கமாககொண்டிருந்தனர். 

ஹஸ்ரத்தின் வபாத்திற்கு பிறகு வரும் செய்திகள்சிலவற்றில்  இஸ்மாஈல் ஹzஸரத் (பின்னூரி) (தேவ்பந்தி) என அவர்கள் பட்டம் பெற்று வெளியேறியகலாசாலை பற்றி சிலர் தவறுதலாக குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் ஹஸ்ரத் அவர்கள் இந்தாயாவின் டில்லி மர்கஸில் அமையப்பெற்றுள்ள காஷிfபுல் உலூம் அரபுக் கலாசாலையிலேயே சன்மார்க்க கல்வியை கற்று பட்டம் பெற்று வெளியேறி இருந்தார்கள். 

இன்று இலங்கையில்  பட்டம் பெற்று வெளியேறிபல்வேறு துறைகளிலும் சிறப்பாக கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உலமாக்கள் மர்ஹூம் இஸ்மாஈல் ஹஸ்ரத் அவர்களின் மாணவர்கள்ஆவார்கள். 

ஹஸ்ரத் அவர்கள் குருநாகல் மெல்சிரிபுரவில்அமைந்துள்ள உஸ்வத்துன் ஹஸனஹ் அரபுக்கலாசாலையின் நிறுவனராகவும் அதன் தலைமைஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளதுடன்  தாருல்உலூம் அல் ஹாஷிமிய்யஹ் (நாவலப்பட்டிய),  ஜாமிஆஅர் ரஹ்மானிய்யஹ் (அக்குறணை), ரஷாதிய்யஹ்(கொழும்பு மர்கஸ்),  ஜாமிஆ இன்ஆமுல் ஹஸன்(அட்டுளுகம, பண்டாரகம) தீனிய்யஹ் (பாணந்துறை) உஸ்மானிய்யஹ் (டிக்கோயா, ஹட்டன்) ஆகியஅரபுக்கலாசாலைகளில் நீண்ட காலம்  உஸ்தாககடமை புரிந்துள்ளார்கள்.

அவர்களை தமது ஆத்மீக குருவாகக் கொண்டுசெயற்பட்டு வருபவர்கள் இலங்கையிலும் உலகளவிலும்  ஆயிரக்கணக்கானவர்கள்இருக்கின்றனர்.  அவ்வாறானவர்கள் இஸ்மாஈல்ஹஸ்ரத்திடம்  பைஅத் பெற்று தமது அன்றாட அமல்கள், அவ்ராதுகள், திக்ரு இஸ்திஃபார், ஸலவாத்துக்கள் போன்றவற்றை நாள்தோறும்பேணுதலாக செய்து வருகின்றனர். ரமழான் காலம் வந்து விட்டால் அவர்களுடன் இஃதிகாப் இருந்து அவர்கள் மூலம் பயனடைய ஒரு பெரும் கூட்டம் தயாராகி விடுவது வழமை. 

அன்னார் விட்டுச் சென்ற அழகிய முன்மாதிரிகளை கடைபிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை அள்ளாஹ் நமக்கும் தந்தருள்வானாக. அன்னாரின் தவறுகளை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நல்குவானாக. அன்னாரது குடும்பத்தினருக்கு பொறுமையைநஸீபாக்குவானாக. 

அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர். 


மர்ஹூம் இஸ்மாஈல் ஹzஸரத் தொடர்பான ஒரு சிறப்புப் பார்வை மர்ஹூம் இஸ்மாஈல் ஹzஸரத் தொடர்பான ஒரு சிறப்புப் பார்வை Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.