(வீடியோ ) பேஸ்புக்கில் வீடியோ பதிவேற்றியதால் மனவேதனையடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.


வத்தளை பிரதேசத்தில்  இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வத்தளை ஹேகித்த பிரதேசத்தில் 17 வயதான ஹேஷான் சத்துரங்க என்ற இளைஞனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் அயல் வீட்டில் இருந்த நாயை தனது வீட்டிற்கு குறித்த இளைஞன் கொண்டு சென்றுள்ளார்

அதனை மீண்டும் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக இந்த இளைஞன் சென்றார். அங்கு நாயின் உரிமையாளர் குறித்த இளைஞனை கடுமையாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்தார். அத்துடன் அதனை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் மனவேதனையடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொகுக்கப்பட்ட வீடியோ
(வீடியோ ) பேஸ்புக்கில் வீடியோ பதிவேற்றியதால் மனவேதனையடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை. (வீடியோ ) பேஸ்புக்கில் வீடியோ பதிவேற்றியதால்  மனவேதனையடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை. Reviewed by Madawala News on April 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.