Talk With Chathura Vs அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி . ( தமிழில்)


கேள்வி : பிள்ளைகளை பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் இல்லையா?

பதில்;  ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?

இல்லை.... நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொண்டு.... தேவையற்ற சனப்பெருக்கம் ஏற்பட்டு...

அப்படியென்றால் எமது முன்னோர்கள் செய்தவை பிழையாகி விடுமே?

இரண்டு பிள்ளைகளை பெற்றால் ஒருவர் அமெரிக்காவில், மற்றவர் இங்கே வேலையில் பிஸி! அம்மாவோ வயோதிபர் மடத்தில்....

அப்படியென்றால் அம்மாவை கவனித்துக்கொள்ள பத்து பிள்ளைகளை பெற்று பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமா?

அப்படியல்ல, பத்து பிள்ளைகள் இருந்தால் ஒருவர் மாறி மற்றவர் சிரமமில்லாமல் பெற்றோரை பார்த்துக்கொள்வார்கள் அல்லவா?

அதுமட்டுமல்ல அந்த பத்துப்பேரில் நாட்டின் தலைவர்களாக, சமயத்தலைவர்களாக, தேசத்தின் வீரர்களாக, கல்விமான்களாக வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டல்லவா?

அப்படி வந்தால் அது நமக்குப்பெருமையல்லவா?

(சதுர அதற்கு மேல் பேசவில்லை)

கேள்வி: முஸ்லிம்கள் மாட்டை மற்றும் ஏனைய உயிரினங்களை கொன்று சாப்பிடுகிறார்கள்... இதனால் அவர்கள் குரூரமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் அப்படியானவர்களா?

உயிர்கள் என்று வரும் போது மாடும் மற்றவையும் உயிர்களாக இருப்பது போல இலை குழைகளுக்கும் உயிர் இருக்கிறது.

மாட்டைக்கொல்வது பாவம் என்றால் காட்டு யானையை கொல்வதும் பாவம்தானே?

விவசாயப்பயிர்களை நாசம் செய்வதாக அண்மையில் கூட அரச அனுமதியுடன் ஒரு யானையை சுட்டுக்கொன்றார்கள்.

இப்படி ஏராளமான யானைகள் இங்கே கொல்லப்படுகின்றன.

மனிதன் உண்ணப்போகும் உணவுப்பயிர்களை பாதுகாக்க அவற்றை நாசம் பண்ணாமல் இருக்க காட்டு யானைகளை கொல்ல முடியுமென்றால்...

உணவுப்பயிர்களில் வரும் கிருமிகளை மருந்தடித்து கொல்ல முடியுமென்றால்.....

உணவுக்காக மாட்டை ஏன் கொல்ல முடியாது?

அவ்வாறு உணவுக்காக ஜீவராசிகளை கொல்லக்கூடாதென்று நீங்கள் உறுதியான ஒரு தீர்மானத்தை எடுத்தால்....

நான் வீதிக்கு இறங்குவேன்.

நானே மாட்டு இறைச்சிக்கடைகளை வீதிக்கு இறங்கி மூடுகிறேன்.

காட்டு யானைகளை கொல்வதை, உணவுக்காக கோழிகளை கொல்வதை ஏனைய மிருகங்களை கொல்வதை நிறுத்தப்போவதாக ஒரு பொது அறிவித்தல் வரட்டும், நானும் அதனை அமுல் படுத்த வருகிறேன். எந்தப்பிரச்சினையும் இல்லை.

மாடு உயிர் என்றால் கடலில் உள்ள மீன் உயிரில்லையா? கோழி உயிரில்லையா?

தீர்மானமெடுங்கள்.

ஆம் நீங்கள் தெளிவாகச்சொல்கிறீர்கள்.


சதுர மஹத்மயா நாம் நிதானமாக புத்தியை பாவித்து இந்த விடயங்களை சிந்திக்கவேண்டும்.

இது நீங்கள் நான்கு திருமணங்கள் செய்வதைப்பற்றியது....
நானும் நீங்களும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த குடிமக்கள்.

அப்படியிருக்கும் போது உங்களுக்கு நான்கு திருமணங்களை செய்வதற்கு அனுமதி இருக்கிறது எனக்கு அந்த தெரிவு இல்லை.

இது எனது தனிப்பட்ட உரிமை மீறப்படுவது போன்று அல்லது பாகுபாடான நீதியாக தெரிகின்றதே! இதனைப்பற்றி....?

இல்லை, முதலாவதாக நீதியை பொறுத்த வகையில் பொது நீதி, தனிப்பட்ட நீதி என்றிருக்கிறது.

குர்ஆன் திருமணம் தொடர்பில் இட்டிருக்கும் கட்டளையினை பின்பற்றுகிறோம்.

நாங்கள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் குர்ஆனின் சட்டங்களையே பின்பற்றுகிறோம். அது நாட்டின் பொது நீதியை, சட்டத்தை தகர்ப்பதாக பொருள்படாது.

இஸ்லாம் சொல்லும் தனிப்பட்ட நீதியை கடைப்பிடிக்கும் போது அது பொது நீதியை பாதிக்காத வண்ணமே நடந்து கொள்கிறோம்.

இரண்டாவது , இது பெளத்த தர்மம் போதிக்கப்படுகிற/ பெளத்தர்கள் கூடுதலாக வாழுகிற ராஜ்ஜியம். இருந்த போதும் அதிகமான விபச்சார விடுதிகள் இங்கே இருக்கின்றன.

மஸாஜ் நிலையங்கள் என்ற பெயரில் நான் முன்னர் சொன்னது போன்று பல விடயங்கள் நடக்கின்றன.

திருமணத்திற்கு அப்பாலான பாலியல் தொடர்புகள், சட்ட விரோத பாலியல் நடவடிக்கைகள் என்பன மலிந்து காணப்படுகின்றன.

இஸ்லாம் உங்களது பாலியல் தேவைகளை சட்டபூர்வமாக செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறது.

மூன்றாவது, இஸ்லாம் வெறும் அழகிற்காக அல்லது கவர்ச்சிக்காக மாத்திரம் திருமணம் செய்து கொள்ளும் படி சொல்லவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் திருமணம் பெண்ணுடைய நான்கு விடயங்களை கவனத்தில் கொண்டு செய்யப்படுகிறது.

முதலாவது அழகு இரண்டாவது பொருளாதாரம் மூன்றாவது பரம்பரை நான்காவது நற்பண்புகள். யார் நான்காவதை தேர்ந்தெடுக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவர் என்று உபதேசித்துள்ளார்கள்.

மற்றது நான் நிறைய பொது வேலைகளில் சம்பந்தப்படுபவன் என்ற வகையில் ஆடைத்தொழிற்சாலைகளில் நிறைய பெண்களை சந்திக்க முடிகிறது, அவர்களுள் பலருக்கு 35, 36 வயதுகளாகிறது. ஆனால் ஏதேதோ காரணங்களால் இன்னுமே அவர்களுக்கு திருமணமாகவில்லை.

இஸ்லாம் சொல்கிறது உங்களிடம் போதிய பொருளாதாரம் இருக்கிறதா? உடல் ஆரோக்கிய பலமிருக்கிறதா? அவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள முடியுமா? சட்டபூர்வமாக திருமணங்களை செய்துகொள்ளுங்கள்.

மாறாக அந்த திருமணங்கள் வெறும் அழகிற்காக, கவர்ச்சிக்காக, நூறு வீதம் காம ஆசையினை தீர்த்துக்கொள்வதற்காக, பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக மாத்திரம் அமைந்து விடக்கூடாது.
நன்றி : முஜீப் இப்ராஹீம் 

Talk With Chathura Vs அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி . ( தமிழில்) Talk With Chathura Vs அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி . ( தமிழில்) Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.