மாவனல்லை புத்தர் சிலை உடைத்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்த இரு வாலிபர்களுக்கு 6 லட்சம் சன்மானம் !மாவனல்லை பிரதேத்தில்  புத்தர் சிலை உடைத்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்த இரு பெரும்பான்மை
இன  வாலிபர்களுக்கு 6 லட்சம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது .

இதனை இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வழங்கி வைத்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த இரண்டாம் திகதி  நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் இதனை வழங்கி வைத்துள்ளார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க இரவு பகல் என பாராமல் அர்பணிப்புடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவித்து அவர்களுக்கு சன்மாணம் வழங்கும் நிகழ்வில் இந்த பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 854 பொலிஸ் அதிகாரிகளும் 6 சிவில் பொதுமகன்களும், இரண்டு அரச அதிகாரிகளும் கௌரவிக்கப்பட்டு சண்மானம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு கோடி இருபது லட்சம் பணம் இவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை புத்தர் சிலை உடைத்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்த இரு வாலிபர்களுக்கு 6 லட்சம் சன்மானம் ! மாவனல்லை புத்தர் சிலை உடைத்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்த இரு வாலிபர்களுக்கு 6 லட்சம் சன்மானம் ! Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.