எம் சமூகத்தில் சில பலவீனங்கள் உள்ளன. அவற்றை சீர் செய்வது கொண்டு சில சமூக மாற்றங்களை எதிர் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

👉 முதலாவது
எம் சமூகத்தை நோக்கி வரக்கூடிய குற்றச் சாற்றுக்களை நாம் இனவாதக்
கருத்தாக அல்லது மாற்று இயக்க கருத்தாக மாத்திரம் பார்ப்பது.

உதாரணமாக முஸ்லிம் சமூகத்தினுள் பயங்கரவாதக்குழு ஒன்று உருவாகி வருகின்றது என்பதை மாற்று மதத்தவர்கள் சுட்டிக் காட்டினார்கள். isis அப்பாவி இளைஞர்களை காவு கொள்கிறது என்று வெளிப்படையாக  இஜ்திமா வைத்து தவ்ஹீத் ஜமாத் உடைத்துச் சொன்னது.


இக்கருத்துக்களில் உண்மைகள் உள்ளனவா என்பதை தேடிப் பார்ப்பதை தவிர்த்து அதனை இனவாத or இயக்கவாத கருத்தாக மாத்திரம் பார்த்து காலில் பட்ட தூசியை தட்டி விடுவதுபோல் தட்டி விட்டுச் சென்றார்கள் நம் சமூக தலைமைகள். தவ்ஹீத் அமைப்புக்கள் வெளிப்படையாக செய்த விழிப்புணர்வுகளை சற்றேனும் சிந்தித்து அன்றே சமூகம் ஒன்றுபட்டு இப்பிரச்சினைக்கான தீர்வை காண முற்பட்டிருந்தால் சிலவேளை இவ்வளவு பெரிய பாரதூரம் ஏற்படாது தடுத்திருக்கலாம்.

👉 இரண்டாவது

சமூகம் ஒரு பிழையை செய்தால் அதனை திருத்தும் வழிகளை ஆராய்வதை விட்டு விட்டு சமூகத்தின் குறைகளை மறைத்து சுத்தம் பேசி குற்றங்களை பூட்டி வைத்தல்.


 உதாரணமாக மாவனல்லை சிலை உடைப்பு. முஸ்லிம் சமூகத்தின் முக்கிய ஒரு இயக்கத்தின் முக்கிய ஒரு அறிஞரோடு தொடர்பாக்கப் பட்டது.

(உண்மையை அல்லாஹ்வே அறிவான்). நம் தலைமைகள் என்ன செய்திருக்க வேண்டும். எம் சமூகத்தின்மீது சுமத்தப்படும் இககுற்றச் சாட்டில் உண்மையுள்ளதா என ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆய்வு மட்டும் போதாது. ஆய்வில் எம் சமூகத்தில் குற்றமுள்ளது என்பது உணரப் பட்டால்! இதிலிருந்து எவ்வாறு சமூகத்தை காப்பது எனும் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். வெறுமனே கண்டன அறிக்கைகளும், வசூலித்து உதவிகள் செய்தலும் நிரந்தரத் தீர்வாக அமையாது. மாவனல்லை சம்பவத்தில் எம் கடமையை நாம் உணர்ந்திருந்தால் இன்று இப்பாரிய குற்றச் சாட்டிலிருந்து உம்மத்தை காத்திருக்கலாம்.

👉 மூன்றாவது.

பொதுப் பிரச்சனைகளுக்குள் தனியார் பிரச்சினைகளுக்கான தீர்வை தேடுவது அல்லது பழி வாங்க முற்படுவது. உதாரணமாக... ஸஹ்ரான் என்பவர் இத்தாக்குதலில் ஈடு பட்டதாக உறுதியற்ற செய்திகள் கசிந்து பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.


ஆனால் அரசு உத்தியோகப்பூர்வ தகவலை அறிக்க முன்னரே நம் சமூக ஆய்வாளர்கள் பாதையோரங்களிலும் சந்து பொந்துகளிலும் தீர்மானங்களை எடுக்கத் துவங்கி விட்டார்கள்.  ஸஹ்ரான் என்பவர் யார்? அவருக்கும் தவ்ஹீத் ஜமாத்தினருக்கும் என்ன தொடர்பு? இவருடன் கூட்டு சேர்ந்த குற்றவாளிகள் யாவரும் தவ்ஹீத் ஜமாத்தில் மாத்திரம் இருந்து isis அமைப்புடன் இணைந்தவர்களா? வேறு இயக்கங்களில் இருந்து isis அமைப்புடன் இணைந்துள்ள குற்றவாளிகளும் இனங்கானப் பட்டுள்ளனரா?


 இவற்றையெல்லாம் தேடியறிந்து யதார்த்தத்தை அறிந்து செயலாற்றுவதற்குப் பதிலாக உடனே தனக்கு  பிடிக்காத அமைப்பின் பெயர் உச்சரிக்கப் பட்டு விட்டதால் கால் தலை தெரியாது செயல்பாடுகளில் களமிறங்கி விட்டனர். ஆனால் தற்போதைய நிலமை என்ன? ஏற்கனவே isis குறித்து நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் எத்தி வைத்த கூட்டம் தவ்ஹீத் ஜமாத்தினராக இன்று ஊடகங்களிலேயே பேசப் படுகின்றனர். நாட்டுக்கும் உம்மத்துக்கும் நலவை போதித்த ஒரு கூட்டத்தை குற்றவாளியாக்கிய அவசரப் புத்திக் காரர்கள் தன் வார்த்தைகளை விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது தடுமாறுகின்றனர்.


காதில் கேட்பதையெல்லாம் உண்மை என்று நம்புவதாலும், ஒரு அமைப்பின்மீது கொண்ட வெறுப்பு பழி வாங்கலாக வெளிப்படுவதாலும், தன்னை பாதுகாக்க நாடுபவனையே எதிரியாக பார்கச் செய்து விடுகின்றது.

எனவே எது நடந்தாலும் முதலில் இந்த உம்மத்துக்கு தேவையானது நிதானம் என்பதை உணர்வோமா. நிதானமே சமயோசிதமான சிந்தனைகளை வெளிப் படுத்தும். சமயோசிதத்தைக் கொண்டே சிறுபான்மைகள் காலூன்றி வாழ்ந்துள்ளனர் என்பதை வரலாறுகளை அறிந்தவர்கள் அறிவர்.

அல்லாஹ்வேஅனைத்துக்கும் போதுமானவன். யார் எந்தக் கொள்கையை பின்பற்றினாலும் அது அவரது புரிதலும், கொள்கைச்சுதந்திரமும் என்பதை புரிந்து! என்னைபோல்தான் நீ இருக்கனும் எனும் மடமையை மறந்து, நிறம் பலதாகினும் குடை ஒன்றே எனும் சிந்தனையுடன் ஒரே குடையின்கீழ் பயனிக்கும் உம்மத்தாக எம்மை நாம் ஆக்கிக் கொள்வோமாக.

BY:
அபூ சுமையா 
மர்கஸுல் இஸ்லாஹ் தலைவர் (மடவளை ) 
எம் சமூகத்தில் சில பலவீனங்கள் உள்ளன. அவற்றை சீர் செய்வது கொண்டு சில சமூக மாற்றங்களை எதிர் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ். எம் சமூகத்தில் சில பலவீனங்கள் உள்ளன. அவற்றை சீர் செய்வது கொண்டு சில சமூக மாற்றங்களை எதிர் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ். Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.