(படங்கள்) இலங்கை - கட்டார் நாட்டுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உள்ளுராட்சி மன்ற சபைகள் ஊடாக நடவடிக்கை.
- இக்பால் அலி -
இலங்கை கட்டார் நாட்டுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை மாகாண உள்ளுராட்சி மன்ற
சபைகள் ஊடாக  வலுவானதாக முறையில் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக என்று கட்டார் நாட்டு மாகாண உள்ளுராட்சி மன்ற சபைளுக்கான  தலைவர் இளவரசர்  முஹம்மத் பின் ஹமூத் ஷாபி அல் ஷாபி தெரிவித்தார்.


உள் நாட்டலுவல்கள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர்  வஜிர அபேர்வதனவின் வழிகாட்டலின் கீழ்   கட்டார் நாட்டிலுள்ள  உள்ளுராட்சி மன்றங்களுக்கான அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற சபைகளுக்கான  தலைவர் இளவரசருமான முஹம்மத் பின் ஹமூத் ஷாபி அல் ஷாபி அவர்களுடைய தலைமையில்  மூன்று நாள்  உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற் கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்த தூது குழுவினர்களுக்கு  இலங்கை உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்தின் ஏற்பாட்டில்  விசேட வரவேற்பு வைபவபம்  இலங்கை உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்தின்  பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்  சஹீட் எம். ரிஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இலங்கை வந்துள்ள கட்டார் நாட்டு மாகாண உள்ளுராட்சி மன்ற சபைளுக்கான  தலைவ இளவரசர்  முஹம்மத் பின் ஹமூத் ஷாபி அல் ஷாபி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கட்டார் நாட்டில் 21 உள்ளுராட்சி மன்ன சபைகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் விசேடமாக  ஒரு தலைமை சபை இருக்கிறது. இலங்கையில் வித்தியாசமான முறையில்  உள்ளுராட்சி மன்ற சபைகள் அமைந்துள்ளன. எனினும் உள்ளுராட்சி மன்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை நாட்டுடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். தொழில் நுட்ப ரீதியிலான அறிவுகளையும் தேவையைக் கருத்திற் கொண்டு அதன் பிரிவுகளை இரு நாடுகளுகம் சமரசமாகப் பகிர்ந்து கொண்டு  அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கான இந்தப் பயணம் சிறந்த பயணமாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் விசேடமாக உள்ளுராட்சி மன்ற மாகாண சபை  இராஜாங்க அமைச்சர் எம். எச். ஏ. ஹரீஸ் அவர்களுக்கு விசேட விருது வழங்கி தூதுக் குழுவினர் கௌரவித்தினர்.


இதில் கட்டார் நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  கலாநிதி ரஷீட் பின் சாபி அல் மர்ரி, உள்ளுராட்சி மன்ற மாகாண சபை  இராஜாங்க அமைச்சர் எம். எச். ஏ. ஹரீஸ், இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலான, உள் நாட்டு அலுவலகள் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சரின் செயலாளர் எச். டி. கமல் பத்மசிரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் 11 பேரைக் கொண்ட கட்டார் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி
01-4 -2019


(படங்கள்) இலங்கை - கட்டார் நாட்டுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உள்ளுராட்சி மன்ற சபைகள் ஊடாக நடவடிக்கை. (படங்கள்) இலங்கை - கட்டார் நாட்டுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உள்ளுராட்சி மன்ற சபைகள் ஊடாக நடவடிக்கை. Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.