ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்தினர்.


ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்க எதிர்க்­கட்சித் தலைவர்
மஹிந்த ராஜபக் ஷ விருப்பம் தெரி­வித்­துள்ளார். எனினும் வெற்­றி­பெறும் வேட்­பாளர் யார் என்­பது குறித்து ஆரா­யவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை என்­பதை ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.


ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும்- ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடையில் எதிர்­வரும் 10 ஆம் திக­தியும் ஒரு பேச்­சு­வா­ர்த்தை நடத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தரப்­பினர் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சந்­தி­ப்பொன்று இடம்­பெற்றது, இந்த சந்­திப்பில் ஜனா­தி­பதி தேர்தல் நகர்­வுகள் மற்றும் வேட்­பாளர் குறித்தே அதி­க­மாக பேசப்­பட்­டுள்­ளது.


ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் -ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடையில் எதிர்­வரும் 10 ஆம் திகதி சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன்  நடத்­தப்­படும் சந்­திப்பை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் கோத்­தா­பய தரப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்தும் கூட்­ட­ணியும் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் பலரும் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கடந்த வரவு செலவு திட்­டத்தில் அர­சாங்­கத்தை எதிர்த்து வாக்­க­ளிக்­கா­தமை மறை­மு­க­மாக அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் செயற்­பாடு என்­ப­தையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அதி­க­மா­ன­வர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நெருக்­கத்தை கையாண்டு வரு­கின்­றமை ஆபத்­தா­னது என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­யுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இனியும் கூட்­ட­ணியை அமைத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என்­பதை கூறி­யுள்­ளனர். கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெறு­பே­றுகள் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தனித்த வெற்­றிக்கு வழி­வ­குக்கும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.


அதேபோல் மாகா­ண­ச­பைகள் தேர்­தலை  இந்த ஆண்டு இறு­திக்குள் நடத்த முடி­யாது என்ற கார­ணத்தை சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­வதே சிறந்த நகர்­வுகள் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இது குறித்து பேச்­சு­வா­ர்த்தை ஒன்­றினை நடத்த தீர்­மானம் எடுக்க வேண்டும் என்­ப­தையும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.  இதில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களுக்கும் கோத்தா அணி­யி­ன­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்கி வெற்­றியை தக்­க­வைக்க முடி­யாது என்­பதை நேர­டி­யா­கவே எதிர்க்­கட்சி தலை­வ­ரிடம் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலையில் உள்ளார். அதேபோல்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது அர்த்­த­மில்லை. அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நெருக்­கத்தை கையாண்டு வரு­கின்­றனர். ஆகவே ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை முன்­னி­லைப்­ப­டுத்தி கோத்­தா­பய ராஜபக் ஷ போன்ற ஒரு­வரை கள­மி­றக்கி வெற்­றி­பெற வேண்டும் என்­ப­தையை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.


இதன்­போது  வெற்­றி­பெறும் வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்க ஆராய்வோம் என  எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ  இரு தரப்­பி­ன­ருக்கும் கூறியுள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பில் ஒருவரை களமிறக்க அவசியம் இல்லை என மஹிந்த ராஜபக் ஷ இறுதியாக தெரிவித்துள்ளதாகவும், பொதுஜன முன்னணி வேட்பாளர் ஒருவரையே மக்களும் கேட்பார்கள் ஆகவே எமது தரப்பில் ஒருவரை களமிறக்க முடியுமானால் நல்லது என்றும் கூறியுள்ளார் பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நன்றி  -Vidivelli
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்தினர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்தினர். Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.