ஒரு அத்தியாயம் முற்றுப்பெறுகின்றது...!!உங்களது மரணச்செய்தி செய்தி கேட்டு ஒரு கணம் அதிர்ந்துபோனேன் நான்.

சுலைமான் சேர்....
கல்முனை சாகிரா கல்லூரியின் வரலாறுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஆசிரிய நாமங்களில் என்றும் உங்களது பெயர் அடங்கி இருக்கும் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மையாகும். பல்வேறு பட்ட மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் பிரகாசமான எதிர்காலத்திர்க்ககவும் பாடுபட்டு அந்த மாணவர்களின் உயர்ச்சியில் எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இன்றி இந் முகத்துடன் அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்த செம்மல் நீங்கள்.


எனது பாடசாலைக் காலங்களில் ஆசிரியராக அறிமுகமாயிருந்தாலும் நான் உயர்தரம் கற்கும் பொழுது (1998 – 2001) எனது வகுப்பாசிரியராக அறிமுகமாகி இணைந்த கணிதம் என்ற பாடத்தை அழகுற கற்பித்தீர்கள். இணைந்த கணித பாடத்தை நேர்த்தியான ஆங்கில உச்சரிப்புடன் மனதை விட்டு அகலாமல் கற்பிக்கும் திறமை என்றும் உங்களுக்கு மாத்திரமே உரித்தான பண்பாகும். தங்களது அழகுடன் சேர்ந்த கம்பீரமான தோற்றமும் அதற்க்கு ஏற்றாற்போல் அடைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுக்கும் விதமும் வயது வித்தியாசமின்றி அனைவருடனும் கனிவுடன் கருத்துக்களைப் பரிமாறும் முறையும் தசாப்தங்கள் கடந்த போதிலும் என் கண்களை விட்டு அகலவில்லை.
கற்பிப்பது கடமையென்று மாத்திரம் செய்யாமல் தன்னால் முடிந்த பல உதவிகளையும் நான் அறிய பல மாணவர்களுக்கு செய்தீர்கள் அதே வேளை பாடசாலைக் காலந்தின் பின்னர் எதிர்காலத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ளப் போகின்றீர்கள் என்ற சிந்தனையை என் மனதினில் விதைத்த செம்மல் நீங்கள்.


காணும் போதெல்லாம் அன்புடன் விசாரிக்கும் உங்களது உயர்ந்த குணமும் நட்பு பாராட்டும் அழகிய முகமும் இனி மனதினில் நினைவுகளாகவே மரணம் வரையில் தொடர்ந்து இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் தங்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனத்தினால் நாங்கள் கவலை கொண்டிருந்த வேளையில் எங்களைக் கூட ஆறுதல் படுத்தி அந் நிலையில் இருந்து மீண்டு வந்து  எங்களுக்கு புத்துனர்ச்சியளித்தீர்கள்.மரணம் எல்லோருக்கும் சமனானது அதை யாரும் தவிர்க்கவோ அல்லது தடுக்கவோ முடியாது அது இறைவனின் நாட்டம் இன்று உங்களுக்கு என்றாவது ஒருநாள் எங்களுக்கும் அது உரித்தாகும்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் சுவனத்து பூச்சோலையை நீங்கள் தரிச்சிக்க உங்கள் மாணவர்களாகிய நாங்கள் எல்லாம் வல்ல இறைவனிடம் கைஏந்துகின்றோம்.


ஏக இறைவா எங்களது ஆசிரியர் ஏ. சுலைமான் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உயர்ந்த சுவர்க்கமாகிய ஜன்னத்துல் பிர்தௌசை வழங்கி அருள் புரிவாயாக ஆமீன். அன்னாரை பிரிந்து துயரில் வாடும் அவரது மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்கள் அவரது நேசத்துக்குரிய நண்பர்கள் அனைவருக்கும் மன ஆறுதலையும் நிம்மதியையும் வழங்கி அவர்களின் பாவங்களையும் மன்னித்து அருள் புரிவாயாக. ஆமீன்.

– முகம்மத் காமில் –
ஒரு அத்தியாயம் முற்றுப்பெறுகின்றது...!! ஒரு அத்தியாயம் முற்றுப்பெறுகின்றது...!!


Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.