சில பாகங்களில் நேற்றிரவு மின் வெட்டு இல்லை... பகலிலும் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது.


இலங்கை மின்சார சபையினால் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் துண்டிப்பு நேரம்
மாற்றம் அடைந்துள்ளதா   மக்கள்சமூக வலைகளில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாட்டிலுள்ள சில பிரதேசங்களுக்கு நேற்றிரவு (5) 2 மணி நேர மின் துண்டிப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும், வேறு சில பிரதேசங்களுக்கு ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் சில பிரதேசங்களுக்கு நேற்று இரவு வேளை, மின்சாரம் துண்டிக்கப்படவே இல்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையில் பகல் நேரத்தில் 3 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமுமாக மொத்தம் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், நேற்றிரவு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றும் பல பிரதேசங்களில் பகல் வேளைகளில் ஏற்படுத்தப்படும் மின் வெட்டு இதுவரை ( 12 மணி ) ஏற்படுத்தப்படவில்லை.
சில பாகங்களில் நேற்றிரவு மின் வெட்டு இல்லை... பகலிலும் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. சில பாகங்களில்  நேற்றிரவு மின் வெட்டு இல்லை... பகலிலும் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. Reviewed by Madawala News on April 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.