No Drugs; No smoking” கிண்ண உதைப்பந்தாட்ட சம்பியனானது பொத்துவில் றைஸ் ஸ்டார் கழகம்!!


“No Drugs; No smoking” கிண்ண உதைப்பந்தாட்ட சம்பியனானது பொத்துவில் றைஸ் ஸ்டார் கழகம்!!



No Drugs; No smoking” என்ற தொனிப்பொருளிலே நடைபெற்ற பொத்துவில் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன் மகுடம் சூடி மீண்டுமொரு தடவை தன் கம்பீரத்தை நிரூபித்துக்காட்டியது.

பொத்துவில் RM விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இந்த சுற்றுப் போட்டியிலே பல்வேறு கட்ட சுற்றுகளில் வெற்றி கொண்டு மாபெரும் இறுதிப் போட்டியில் பொத்துவிலின் தசாப்தங்கள் வரலாறு கொண்ட றைஸ் ஸ்டார் வி.கழகமும் பொத்துவில் லிவர்பூல் வி.கழகமும் பலப்பரீட்சை நடாத்தின.

அந்த வகையில் ஆட்ட நேர முடிவில் 1:1 என்று சமனிலையில் இரு அணிகளும் கோல்களை புகுத்தி இருந்தன. பின்பு பெனால்டி உதை முறையில் 4:1 என்று புள்ளிகளை பெற்று றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகம் பொத்துவிலின் உதைப்பந்தாட்ட சம்பியனாக மற்றுமொரு தடவை கிரீடம் சூடிக் கொண்டது.

கௌரவ பிரதேச சபை உறுப்பினரும், ஏற்பாட்டு குழுவின் தலைவருமான எம்.எச்.எம் கியாஸ் தலைமையில் நடைபெற்ற சுற்றுத் தொடரின் இறுதிநாள் நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எம்.எஸ் வாஸித் பிரதம அதிதியாகவும், கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம். மஜீத், மதிப்பிற்குரிய ஆசிரியர் என். டீ. எம். றாசுதீன், அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் எம். ஏ. எம். நௌபல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சம்பியன் றைஸ் ஸ்டார் அணிக்கு வெற்றிக் கேடயமும், காசோலையும் வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக றைஸ் ஸ்டார் அணியின் ஐ.என்.எம் நுஸ்கி தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வருடம் நடைபெற்ற பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியிலும் றைஸ் ஸ்டார் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், நடைபெறவுள்ள இளைஞர் கழக சம்மேளன உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

கழகத்தின் தலைவராக இருந்து அணியை நேர்த்தியாக வழிநடாத்தும் கழக தலைவர் சட்டத்தரணி எம்.எம் சபாய்தீன் அவர்களுக்கும் ஏனைய கழக நிர்வாகிகள், அங்கத்தவர்கள், அணியின் வெற்றிக்காக கூட நின்று பங்கு கொடுத்த கழக முகாமையாளர் பசூர்க்கான் புஹாரிதீன், பொருளாளர் முஸம்மில் உள்ளிட்ட அனைவருக்கும் உதைப்பந்தாட்ட அணி வீரர்கள் உளப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக்
கொள்கிறார்கள்.

-சல்மான் லாபீர்


No Drugs; No smoking” கிண்ண உதைப்பந்தாட்ட சம்பியனானது பொத்துவில் றைஸ் ஸ்டார் கழகம்!! No Drugs; No smoking” கிண்ண உதைப்பந்தாட்ட சம்பியனானது பொத்துவில் றைஸ் ஸ்டார் கழகம்!! Reviewed by Madawala News on April 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.