ஜனாஸா அறிவித்தல் : சம்மாந்துறை நாஷாட் மொஹிடீன் பாவா. nb

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் கவலை கொண்டுள்ள இந் நிலையில் முகநுாலில்
எனக்கு நன்கு பரீட்சயமான எனது அன்பு நண்பன் சம்மாந்துறை  நாஷாட் மொஹிடீன் பாவா அவர்களின் வபாத் (மரணித்த) செய்தி மேலும் வேதனையை கூட்டி விட்டிருக்கின்றது.

இன்னாலில்லாஹி வா இன்னாஹ் இலைஹி ராஜிஊன்.

நாஷாட் மிகத் திறமையானவர், தொழில்நுட்ப விடையங்களில் மிகவும் அறிவுள்ளவர், எனக்கு பல தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கியுள்ளார். இணையத்தளம், யூடுப், புளொக்கர் என பல விடையங்களில் தேர்ச்த்தி பெற்றவர்.

உடல்நல ஆரோக்கியமற்றிருந்தும் தன்னால் இயலாது என்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் தன்நம்பிக்கையோடு வளம் வந்த சிறந்த அறிவாளி, இணையத் தகவல்களைக் கரைத்துக் குடித்தவர். #Wisenas #Gallery என்ற ஒரு யூடுப் சணலை ஆரம்பித்து அதில் பல தொழிநுட்பத் தகவல்களை அள்ளி வழங்கியவர்.

இதோ அவரது யூடூப் சணல் https://www.youtube.com/channel/UCEqX5oePKSyLIBRdKnvWP0A?app=desktop

யா அல்லாஹ்...!! எனது நண்பன் நாஷாட் மொஹிடீன் பாவாவின் பாவங்களை மன்னித்து அவரது மண்ணரையை சுவர்க்கத்துப் பூஞ்சோலையாக ஆக்கியருள்வாயாக.

ஆமீன்.

நண்பன் நாஷாட் மொஹிடீன் பாவாவின் பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மக்கள் நண்பன்
அன்சார் 
ஜனாஸா அறிவித்தல் : சம்மாந்துறை நாஷாட் மொஹிடீன் பாவா. nb ஜனாஸா அறிவித்தல் : சம்மாந்துறை நாஷாட் மொஹிடீன் பாவா. nb Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.