இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவ அப்டேட்..

இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவ அப்டேட்..
செவனகல - துங்கமயாய - நுகேகல யாய பிரதேசத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அதன்போது கொலை செய்வதற்கான பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் குறித்த சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர் 31 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


காணிப்பிரச்சினையே இந்த கொலைகளுக்கான காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


நேற்று இடம்பெற்ற இந்த கொலைகளின் போது கொலை செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 54 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவ அப்டேட்.. இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவ அப்டேட்.. Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5