நிருவாகப் பயங்கரவாதிகளுக்கு கண்டனம்.


அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணி
உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார் இதில் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டமைக்கு தனது கண்டனத்தை ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபையின் 12 வது அமர்வு சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 28 ம் திகதி நடைபெற்றது அதில் தன்னுடைய கருத்தினைத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம் சமூகம் காணிகள் இல்லாமலும், அவர்களுடைய காணிகளுக்கு ஆவணங்கள் இன்றியும் பல்லாண்டு காலாமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்திற்கு காணி உறுதியினை வழங்காமற் போனதற்கு நிருவாக ரீதியாக பயங்கரவாதிகள் போன்று செயற்படுகின்ற சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

நிருவாகப் பயங்கரவாதிகளுக்கு கண்டனம். நிருவாகப்  பயங்கரவாதிகளுக்கு  கண்டனம். Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.