சிறுவயதில் இருந்தே தங்களுடன் சகோதரனாக பழகிய பெரும்பான்மை இன நபருக்கு மல்வானை மக்களின் நன்றிக்கடன்.


சிறுவயதில் இருந்தே தங்களுடன் சகோதரனாக பழகிய பெரும்பான்மை இன நபர் ஒருவரின் மரணத்தின்
பின்னர் மல்வானை பிரதேச மக்கள் செய்த இறுதிக்கிரியை நிகழ்வுகள் சமூக வலைகளில் அதிகம் பேசப்படுகிறது.

லயனல் சிங்யோ  என அறிவியப்படும்  குறிப்பிட்ட பெரும்பான்மை இன நபர் சிறு வயது முதல்  மல்வானை உலஹிடுவல பகுதியில் முஸ்லிம்களுடன் சகோதரனை போல் பழகி வந்ததுடன் அவரின் பிள்ளைகளும் அவரை போலவே பிரதேச மக்களுடன் மிக அன்னியோன்யமாக பழகி வந்தவர்கள்.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்த போது ( 102 வயது)  பிரதேச முஸ்லிம்கள் அவரின் வீட்டில் இடம்பெற்ற  இறுதிக்கிரிகைகளிலும் கலந்து கொண்டு அங்கு தேவையான உதவிகளை முன்னின்று செய்துள்ளதுடன்   பிரேதத்தை சுமந்து சென்று அனைத்து  இறுதிக்கிரியைகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் கலந்து கொண்டு பல்லின சகவாழ்வினை நிலைநாட்டி முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளனர்.

உளவறிடுவல பிரதேச பள்ளிவாயல்களின் நிர்வாகத்தினர், ஊர்ப்பிரமுகர்களும் இவ்விறுதிக்கிரியையில் கலந்து கொண்டனர்.
- தகவல் : இன்ஸாத் / பவ்சான்
சிறுவயதில் இருந்தே தங்களுடன் சகோதரனாக பழகிய பெரும்பான்மை இன நபருக்கு மல்வானை மக்களின் நன்றிக்கடன். சிறுவயதில் இருந்தே தங்களுடன் சகோதரனாக பழகிய பெரும்பான்மை இன நபருக்கு மல்வானை மக்களின் நன்றிக்கடன். Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.