துபாயிலிருந்து இன்று காலை வந்த, மதுஷின் சகாக்கள் நையீம் மற்றும் முபா கைது.


துபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள்
வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதுஷின் மேலுமிரு சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துபாயிலிருந்து இன்று காலை வந்த யு.எல்.-226 என்ற வி​மானத்திலேயே இவ்விருவரும் வருகைதந்தனர்.

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன்

கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இன்று அதிகாலை நாடுகடத்தப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

மொஹம்மட் ஜாபிர் மொஹம்மட் முஃபா மற்றும் மொஹம்மட் நசீம்  மொஹம்மட் பைஸர் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துபாயிலிருந்து இன்று காலை வந்த, மதுஷின் சகாக்கள் நையீம் மற்றும் முபா கைது. துபாயிலிருந்து இன்று காலை வந்த, மதுஷின் சகாக்கள் நையீம் மற்றும் முபா கைது. Reviewed by Madawala News on April 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.