எதிர்க்கட்சியினர் மீண்டும் எமக்கு பின்னால் குத்தி விட்டார்கள்.


வாக்கெடுப்பு கோரமாட்டோம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை முறியடித்து
எதிர்க்கட்சி மீண்டுமொருமுறை எமக்கு பின்னால் கத்தியால் குத்­தினார்கள். 

பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கெளரவமானவர்கள் என்றால் அவர்கள் வாக்குறுதியை மீறமாட்டார்கள் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரி­வித்தார்.


பாராளுமன்றம் நேற்றுக் காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமார­சிறி தலைமையில் கூடியது. பிர­தான நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் ஒழுங்குப் பிரச்சினை­யொன்றை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்­கிழமை உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையால் மாகாண சபையில் தொழில்பு­ரியும் 5 இலட்சம் பேருக்கு எதிர்­வரும் புத்தாண்டுக்கு முன்னர் சம்­பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்­டுள்ளதாக அமைச்சர் வஜிர அபே­வர்த்தன தெரிவித்துள்ளதுடன் பிர­தமரும் இது தொடர்பாக தெரிவித்­திருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு விடயத்தை வெளியில் சென்று அதனை வேறுவிதமாக தெரிவிப்பது முறையல்ல. அத்­துடன் மாகாண சபை ஊழியர்க­ளுக்கு சம்பளம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவ­தில்லை. ஏனெனில் ஏப்ரல் மாதம் வரைக்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்­றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவசர நிலைமை­களின் போது பணம் பெற்றுக்­கொள்ள திறைசேரியில் ஒரு பிரிவொன்று இருக்கின்றது. அதனால் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோல்வியுற்றாலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவ­தற்கு எந்த பிரச்சினையும் ஏற்படு­வதில்லை. அரசாங்கம் இதனை மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியின் செயற்பாட்டை தவறாக சித்திரிக்க முயற்சிக்கின்றது என்றார்.
இதன்போது எழுந்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்­றத்தில் குழுநிலை விவாதம் இடம்­பெறும்போது வாக்கெடுப்புகள் கோரமாட்டோம் என்று கட்சி தலை­வர்களின் கூட்டத்தின்போது தீர்மா­னிக்கப்பட்டது. அந்த இணக்கப்­பாட்டை இவர்கள் முறியடித்து எமக்கு பின்னால் கத்தியால் குத்­தினர். ஒக்டோபர் மாதமும் இத­னைத்தான் இவர்கள் செய்தனர் என்றார்.
அதனைத்தொடர்ந்து மக்கள் விடு­தலை முன்னணி உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ச ஒழுங்கு பிரச்­சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், அமைச்சுக்­கான நிதி ஒதுக்கீடு தோல்விய­டைந்ததால் அமைச்சுக்கு ஒதுக்கப்­பட்ட மொத்த நிதியில் 320 ரூபாவே இல்லாமலாக்கப்படுகின்­றது. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் பாராளுமன்­றத்தில் தெரிவித்திருந்தார். அப்ப­டியாயின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் எவ்வாறு பிரச்­சினை ஏற்படும்?அத்துடன் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வாக்கெ­டுப்பு கோருவதில்லை என்று தீர்­மானித்ததாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கிறார். ஆனால் எந்த கட்சி கூட்டத்திலும் அவ்வாறான தீர்மானம் எடுக்க­வில்லை. முடியுமானால் அதனை தெரிவிக்கவேண்டும். மாறாக விவாதத்தின்போது கோரம் தொடர்பில் கேள்வியழுப்பாமல் இருப்பதற்கும் விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு தேவையென்றால் கோருவதற்கும் கட்சி தலைவர் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கெடுப்பை கோரும் உரிமை உறுப்பினர்களுக்கு இருக்கின்றது. அதனை யாராலும் நிறுத்த முடியாது என்றார்.

நன்றி -Vidivelli  0  5

எதிர்க்கட்சியினர் மீண்டும் எமக்கு பின்னால் குத்தி விட்டார்கள். எதிர்க்கட்சியினர் மீண்டும் எமக்கு பின்னால் குத்தி விட்டார்கள். Reviewed by Madawala News on April 02, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.