இம்ரானிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை வெளியிட்ட போலீசார்.


மாக்கந்துர மதூஸ் உள்ளிட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும்
நிறுவனம் தொடர்பில், தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்துக்கான முழுமையாக நிதியை செலுத்துபவர் மாக்கந்துர மதூஷ் என்பதுடன் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கஞ்சிபானி​ இம்ரான் என்ற போதிலும், மொஹமட் ரிஸ்கான் என்ற நபரே இந்நிறுவனத்தை நடத்திச்  சென்றுள்ளார். ( தற்போது உயிரிழந்து விட்டார்)

எனினும் பாதாளக்குழுவொன்றின் தலைவராகக் கருதுப்படும் கோத்த அசங்க என்பவரின் உத்தரவுக்கமைய  கொஸ் மல்லி என்ற கொலை காரனால்  ரிஸ்கான் கொல்லப்பட்டதாகத்  மதூஸால் கண்டறியப்பட்டுள்ளது.

இதே​வேளை ரிஸ்கான் கொல்லப்பட்டதைப் போன்றே, ​அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் வைத்து கொஸ் மல்லியும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதை டுபாயிலிருந்தவாறே இணையம் ஊடாக மதூஸ் அவதானித்துள்ளார்.

குறித்த சகல விடயங்களும் கஞ்சிபானை இம்ரானிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரானிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை வெளியிட்ட போலீசார். இம்ரானிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை வெளியிட்ட போலீசார். Reviewed by Madawala News on April 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.