கொண்டச்சி கிராமத்தில் இருபெரும் விழாக்கள் : அனைவருக்கும் அன்பான அழைப்பு.


-அஜீஸ் அஹமட் -
கொண்டச்சி ஹமீதியா விளையாட்டுக் கழகமும் இளைஞ்சர்   கழகமும் இணைந்து நாடாத்தும்
மாபெரும் விளையாட்டுப் போட்டியும், கலை கலாசார நிகழ்வுகளும் இன்ஷா அல்லாஹ்  இம்மாதம்  12,13,14,15 ம் திகதிகளில் மிக விமர்சையாக நாடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 கொண்டச்சிக் கிராமத்தினது ஒற்றுமையை வெளிக்காட்டும் முகமாக  இக் KPL (கொண்டச்சி பிரீமிர் லீக்) சுற்றுப் போட்டியை முசலி மண்ணிற்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தியதில் ஹமீதியா விளையாட்டுக் கழகமும், இளைஞ்சர் கழகமும் பெருமிதம் அடைகின்றது.

இம்முறை கொண்டச்சி பிரீமிர் லீக் (KPL ) சுற்றுப் போட்டியானது வித்தியாசமான, அழகான  முறையில் எந்த அரசியல் சாயமும் பூசப்படாமல் கொண்டச்சி கிராம மக்களின்  பூரண அணுசரனையிலும் ஒத்துழைப்பிலும்  இன்ஷா அல்லாஹ்  இடம் பெற இருக்கின்றது.

12ம் திகதி 4 மணியளவில்  சம்பிரதாய முறையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு முதல் நிகழ்வாக சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும். 13,14ம் திகதிகளில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
15ம் திகதி பொது நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிகழ்வை கண்டுகளிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
கொண்டச்சி கிராமத்தில் இருபெரும் விழாக்கள் : அனைவருக்கும் அன்பான அழைப்பு. கொண்டச்சி கிராமத்தில் இருபெரும் விழாக்கள் : அனைவருக்கும் அன்பான அழைப்பு. Reviewed by Madawala News on April 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.