மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக
தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 03 பாடங்களில் C தரச்சித்தியுடன் தமிழ், கணிதம் உட்பட மொத்தம் 06 பாடங்களில் சித்தியடைந்து, 2001/01/01 ஆம் திகதிக்குப்பின்னர் பிறந்தவர்கள் இக்கலாசாலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கல்லூரியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் உஸ்தாத் இப்திகார் இஸ்லாஹி டெய்லி சிலோனிடம் தெரிவித்தார்.

தகுதியானவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 2019 ஏப்ரல் மாதம் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகத்தில் நடைபெறும் இந்நேர்முகப் பரீட்சைக்கு வருகை தரும் மாணவர்கள்,

1. க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேற்றின் மூலப்பிரதி
2. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
3. தேசிய அடையாள அட்டை
4. ஏனைய சான்றிதழ்கள்

என்பவற்றுடன் நேரடியாக வருகை தருமாறும் கல்லூரி நிருவாகம் மேலும் கேட்டுள்ளது. 

- தகவல் -  முஹிடீன் இஸ்லாஹி
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5