(படங்கள் இணைப்பு) குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் தொழிற்சாலை ; பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு தேவையான அனைத்து
வெடிகுண்டுகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பிரித்தானிய ஊடகம் Daily Mail தகவல் வெளியிட்டுள்ளது.


வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.


தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு இந்தத் தொழிற்சாலை சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்தனர்.


 தாக்குதலுக்கு பிரதான திட்டங்களை தீட்டிய இன்ஷாப் அஹமட் கண்டி பிரதேசத்தில் பிறந்துள்ளார். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுள்ளார் என அவரது மனைவியின் சகோதரர் அக்ஷான் அலாம்தீன் தெரிவித்துள்ளார்.


இன்ஷாப் அஹமட் என்பவர் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலுக்கும் அவரது சகோதரரான இல்ஹாம் ஷங்கிரிலா ஹோட்டலுக்கும் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


“அவர் எங்கள் குடும்பத்தை மாத்திரம் அல்ல உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டர்” என அஷ்கான் அலாம்தீன் பிரித்தானிய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.


“அவர் என்ன செய்கின்றார் என நாங்கள் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்திருந்தால் அது குறித்து நாங்கள் பொலிஸாரிடம் அறிவித்திருப்போம். இந்த தாக்குதலை இன்ஷாம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் மற்ற சகோதரரான இல்ஹாமையும் தொடர்புபடுத்தியிருந்தார். அவர்கள் தொடர்பில் எங்களுக்கு வருத்தம் இல்லை கோபம் மாத்திரமே உள்ளது. அவர்களுக்கு அனைத்தும் இருந்தது” என அக்ஷான் அலாம்தீன் தெரிவித்துள்ளார்.


கொழும்பு கிங்ஸ்பரி மற்றும் சினமன் கிரான் ஹோட்டல்கள் இரண்டிற்குள் தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்டது இன்ஷாப் மற்றும் இல்ஹாம் சகோதரர்களே மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


“இந்த தாக்குதலுக்கு முன்னர் தான் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியாவுக்கு செல்வதாக தனது மனைவியிடம் குறிப்பிட்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றி உள்ளார்.  

அதற்கமைய அவரது மனைவி இன்ஷாப் அஹமட் கடந்த வெள்ளிக்கிழமை விமான நிலையத்திற்கு   கணவரை வழி அனுப்பி வைப்பது போல் செட்டப் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதலை மேற்கொண்ட இன்ஷாப் அஹமட்டிற்கு சகோதரர், சகோதரிகள் 9 பேர் உள்ளனர். அவரது தந்தை இலங்கையில் வாசனை திரவிய  பொருட்கள் கொண்டு வரும் வர்த்தகம் மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதலின் பின்னர் பொலிஸாரினால் இன்ஷாபிற்கு சொந்தமான கொழும்பு வெல்லம்பிட்டியவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தி, அங்கிருந்த ஊழியர்கள்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.


கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


அதற்காக அவர்கள் triacetone triperoxide எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் “சாத்தானின் தாய்” என அழைக்கப்படும் ஆரம்ப பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
2017ஆம் ஆண்டு மென்செஸ்டர் மற்றும் 2015ஆம் ஆண்டு பரிசில் ஐ.எஸ் அமைப்பினால் வெடிக்க வைத்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு triacetone triperoxide எனப்படும் வெடி பொருளே பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.






(படங்கள் இணைப்பு) குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் தொழிற்சாலை ; பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. (படங்கள் இணைப்பு) குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் தொழிற்சாலை ; பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.