ஐஸ் போதைப் பொருளுடன், சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது.


ஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் இன்று அதிகாலை சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர்
கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33, 38 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஐஸ் போதைப் பொருளுடன், சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது. ஐஸ்  போதைப் பொருளுடன், சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5