டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட 6 பேர் கைது !மாகந்துரே மதூவுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள்
மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று அதிகாலை 4.45 அவர்களை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளனர் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள் மாகந்துரே மதுஷுடைய உறவினர் டிலான் ரொஷான் சமரசிங்க, மொஹமட் ரிஸான், மொஹமட் பதுர்தீன், மொஹமட் ஜபீர் , சைமன் ஹேவகே, கயான் புத்திம் பெரேரா, சுரேஷ் ரனசிங்க ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் மாகந்துரே மதூவுடன்கை தானவர்களுள் 15பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில்,இன்று 6 பேர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட 6 பேர் கைது ! டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட 6 பேர் கைது ! Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5