தேசிய பாதுகாப்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பூர்கா தடை செய்யப்பட வேண்டும்.



நாட்டில் பயங்கரவாதத்தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பன அமுலில் உள்ள நிலையில் தொடர்
குண்டுத்தாக்குதல்களுக்குப் பொறுப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதற்கு உதவி வழங்கிய அமைப்புக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். 

அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவதுடன், அவர்களது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த, பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஓர் நிலப்பரப்போ, பாதுகாப்புத்தளமோ இல்லாத நிலையில் அவ்வமைப்பிற்கும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கும் இடையில் அண்மைக்காலத்தில் ஏதேனும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம். நேற்று  சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆங்கில ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி, 'இந்த உலகம் முஸ்லிம்களுக்காகவே படைக்கப்பட்டது. எனவே ஏனையோர் அனைவரும் முஸ்லிம்களாக மாறவேண்டும். இல்லாவிடின் அவர்கள் அனைவரும் செத்துமடிய வேண்டும்" என்று தமது சகோதரர் கூறியிருப்பதாகத் தெரிவித்தார். 

பயங்கரவாதத்தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பன அமுலில் உள்ள நிலையில் தொடர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதற்கு உதவி வழங்கிய அமைப்புக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். 

அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவதுடன், அவர்களது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும். 

அத்தோடு நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பூர்கா தடை செய்யப்பட வேண்டும்.

மேலும் மதராஸா பாடசாலைகளில் கற்பித்தல், அராபிய மொழி கற்பித்தல் போன்றவற்றுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டிருப்பார்கள் எனின், அவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படல் வேண்டும்.

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருக்கும் மாலைத்தீவு, பாக்கிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை உடனடியாகத் திருப்பியனுப்புதல் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும். 

அத்தோடு தீவிரவாத செயற்பாடுகள் வேரூன்றியிருக்கும் நாடுகளின் பிரஜைகள் இலங்கை விசாவிற்கு விண்ணபிக்கும் போது அதற்கென்று விசேட ஒழுங்கமைப்பு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம், காத்தான்குடி ஷரியா பல்கலைக்கழகம் மற்றும் பேருவளை, மஹரகம, திருகோணமலை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்டுவரும் இஸ்லாமிய கல்வி மத்திய நிலையங்கள் என்பன அரச பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் மேற்பார்வை, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். 

அத்தோடு அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் தேசிய பாதுகாப்புச்சபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பூர்கா தடை செய்யப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பூர்கா தடை செய்யப்பட வேண்டும். Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.