சர்வதேச நாணய வகைப்படுத்தலில் இலங்கை ரூபா முன்னேறியுள்ளது.
வீழ்ச்சியடைந்திருந்த ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இது 4.5 வீதத்தினால் ஸ்தீரமடைந்துள்ளது
என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சர்வதேச நாணய வகைப்படுத்தலில் முன்னேறியுள்ளது. 
51 நாள் அரசு நீடித்திருந்தால் நாட்டின் நிலைமை எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்க்க முடியாது. இறக்குமதி பொருட்களுக்கான தேவையற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள முன்வருவது மகிழ்ச்சியான விடயமாகும். ஆனால் அவர்கள் மீது சேறு பூச சிலர் முயல்கின்றனர்.வரவு செலவுத் திட்ட விவாதம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது.ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனநாயக விரோத ஆட்சியின் காரணமாக பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

 51 நாட்கள் ஜனநாயக விரோத ஆட்சியால் 57 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த சில காலத்தினுள் 10 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை பெற முடிந்தது. புதிய நிதி சட்டமொன்றை சமர்ப்பிக்க இருக்கிறோம். 

மக்கள் நல திட்டங்களை மேலும் முன்வைக்க இருக்கிறோம். சமுர்த்தி நிவாரணத்தில் இருந்து அரசியலை அகற்ற இருக்கிறோம். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பின்னூட்டம் மேற்கொள்ள இருக்கிறோம். ஏன்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய வகைப்படுத்தலில் இலங்கை ரூபா முன்னேறியுள்ளது. சர்வதேச நாணய வகைப்படுத்தலில் இலங்கை ரூபா முன்னேறியுள்ளது. Reviewed by Madawala News on April 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.