இலங்கைக்கு தற்போது தேவை நேர்மையான சர்வாதிகாரி ஒருவரே
நிறைவேற்று அதிகார முறையை நீக்குதல் என்ற விடயத்திலுள்ள சாதக பாதகங்கள் மீள்
பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதோடு இலங்கையின் தேசிய அரசியல் அதிலும் குறிப்பாக மக்களுக்கு உதவாத ஜனநாயகம், ஊழல் மோசடி போன்ற விடயங்களால் வலுவிழந்து காணப்படுவதை அவதானிக்கின்றோம்.

இலங்கை நாட்டுப் பிரஜைகள் மறைமுகமான அடக்குமுறைகளுக்குள்ளயே தற்போது சிக்கித் தவிக்கின்றனர். ஏனென்றால் மக்களுக்கான அரசியல் இன்று கட்சி நலன், குடும்ப பரம்பரை என்ற நிலைகளால் தாக்கப்பட்டும் அதனூடான தேசிய வளப்பாவனையும், மக்களாட்சியும் இன்று கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசாங்கத்தின் ஸ்தீரனமற்ற நிலை தொடர்பாக விழிப்புணர்வு அவசியம். எமது நாட்டில் இவ்வாறான நிலைகள் அவ்வளவு பெரிய ஆச்சரியமான விடயம் கிடையாது என்றாலும், மக்களாகிய நாம் காலத்துக்குக் காலம் தெரிவு செய்கின்ற மக்களின் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஒவ்வொரு முறையும் அளவிடுவதற்குத் தவறுகின்றோம் இதனால் அரசியல் வறுமை இலங்கையில் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் மூன்றாம் சக்தியின் தேவையை உணருகின்ற நாம் அவ்வாறான மாற்று சக்தியை வளர்த்தெடுப்பதில் மக்களாகிய நாமே பின்னிற்கின்றோம் என்ற கசப்பான உண்மையை மக்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். ஒவ்வொரு முறையும் எமக்குத் தெரிந்த மிக தெளிவான அநீதிகள், ஏமாற்றுக்களை தேர்தல் என்று வருகின்ற போது மாத்திரம் மறந்துவிட்டு பிழையானவர்களுக்கே அல்லது அரசியல் முற்போக்கு அற்றவர்களுக்கே திரும்பத் திரும்ப சந்தர்ப்பங்களை வழங்குகின்றோம்.

இதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள் எனபதனை மக்களாகிய நாம் மிக நிதானமாக சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம். இவற்றுக்கெல்லாம் எமது வாக்குரிமைகளை அற்பத்தனமான பொருளாதார இயலாமைகளைக் கொண்டு வீணடித்து எமது நாட்டின் அரசியலை நெருக்கடிக்குள் ஆளாக்கியும் உள்ளோம்.

எமது நாட்டின் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் எமது நாட்டின்  ஒவ்வொரு குடிசையையும் தட்டத்தான் போகிறது நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும். இன்று எமது பிள்ளைகளை நன்றாக கல்வி கற்கவைக்க முடியவில்லை என்றால் எங்கோ ஓரிடத்தில் எமது அரசாங்கம் தவறுவிட்டிருக்கின்றது என்று அர்த்தம்.

அரசாங்கத்தை சிறந்ததாக நிலை நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்களாகிய எமது கைகளில்தான் தங்கியுள்ளது. இதற்குத் தற்போதய தேவை இலங்கையில் நேர்மையான சர்வாதிகாரியொருவரே.

[MLM.சுஹைல்]
இலங்கைக்கு தற்போது தேவை நேர்மையான சர்வாதிகாரி ஒருவரே இலங்கைக்கு தற்போது தேவை நேர்மையான சர்வாதிகாரி ஒருவரே Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5