இளம் பட்டதாரிகள் அமைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு


(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று நேற்று
(16) கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. 
இவ் வழிகாட்டல் கருத்தரங்கானது கல்முனை பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்களுக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

 குறிப்பாக இந் நிகழ்வில் பல தலைப்புக்களில் விரிவுரைகள் இடம் பெற்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் முபீஸால் அபூபக்கரால் மாணவர்கள் எவ்வாறு  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவேண்டும் அதனால் ஏற்படும்  விளைவுகள் பற்றியும் வினைத்திறனான முறையில் கையாளப்பட வேண்டிய முறை பற்றி தெளிவூட்டினார் .

மேலும்  போட்டிப்பரீட்சைகளில் நாம் எவ்வாறு தயார் படுத்த வேண்டும் அதற்கான முன்னெடுப்புக்கள் எவை இதன் மூலம் நாம்  எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு கையாண்டு இதனை  முகம்கொடுப்பதனூடாக தமது தொழிலை வாய்ப்பை  சரியான முறையில்  அமைத்துக்கொள்வது தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம்  உரையாற்றினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எல் .அப்துல் ஹலீம் அவர்களினால்  பல்கலைக்கழகத்தில் எவ்வாறு வினைத்திறனான முறையில் செயற்படுவதன் மூலம்  தமது அடைவு  மட்டத்தை முன்னோக்கி அடைந்துகொள்வது தொடர்பாகவும் விரிவுரைகள் இடம்பெற்றன.
இளம் பட்டதாரிகள் அமைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இளம் பட்டதாரிகள் அமைப்பினால்  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.